டிசம்பர் 4: அசத்தலான ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது
இந்திய சந்தையில் ஒப்போ நிறுவனம் வரும் டிசம்பர் 4-ம் தேதி ஒப்போ ஆர்17 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலை வரும் டிசம்பர் 1-ம் தேதி முன்பதிவு செய்ய முடியும்
ஒப்போ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக வரும் டிசம்பர் 1-ம் தேதி அன்று இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 1,080 x 2,340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ
இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகள்
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

பேட்டரி-விலை:
இந்த சாதனத்தில் 3700எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளும்
இவற்றுள் அடக்கம். குறிப்பாக ரூ.43,800-விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications