காதலர் தினத்தை முன்னிட்டு ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
உங்கள் பழைய ஸ்மார்ட்போன் கொண்டு எக்சேஞ் செய்தால் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ.40,990-விலையில் வாங்க முடியும்.
காதலர் தினத்தை முன்னிட்டு சியோமி உட்பட பல்வேற நிறுவனங்கள் தொடர்ந்து விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது.

ஒப்போ நிறுவனம் இப்போது அறிவித்துள்ள விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்ப்படுகிறது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை அமேசான் வலைதளத்தில் நாளை வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எப்9 ப்ரோ:
64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.25,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.23,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒப்போ ஆர்17 ப்ரோ:
உங்கள் பழைய ஸ்மார்ட்போன் கொண்டு எக்சேஞ் செய்தால் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ.40,990-விலையில் வாங்க முடியும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ.40,990-ஆக உள்ளது. இந்த ஸமார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஆர்17:
ஒஉங்கள் பழைய ஸ்மார்ட்போன் கொண்டு எக்சேஞ் செய்தால் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ.31,990-விலையில் வாங்க முடியும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ.36,990-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் 25எம்பி செல்பீ கேமரா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 670சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஆர்15 ப்ரோ:
ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் தற்சமயம் ரூ.25,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.28-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 660சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். குறிப்பாக 16எம்பி1020எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 20எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








