Home
Mobile

8ஜிபி ரேம் & 25 செல்பீ கேம் வசதியுடன் ஒப்போ ஆர்17 அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி10 5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

மிகவும் எதிர்பார்த்த ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் மாடலை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 8ஜிபி ரேம் மற்றும் 25எம்பி செல்பீ கேமரா வசதியுடன் இக்கருவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, எனவே விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த சிறந்த மென்பொருள் தொழில்நுட்பத்தை கொண்டு இக்கருவி வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஆப் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு தகுந்தபடி சிறந்த
மென்பொருள் தொழில்நுட்பம் பொறுத்தப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.35,600-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo R17 is the First Smartphone With Snapdragon 670 SoC and Gorilla Glass 6: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X