இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் களமிறங்கும் ஒப்போ ஆர்15எக்ஸ்.!
இக்கருவியில் 3600எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
சியோமி மற்றும் நோக்கியா, போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் அந்நிறுவனங்களுக்கு போட்டியாக ஒப்போ ஆர்15எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஒப்போ ஆர்15எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம், பெரிய டிஸ்பிளே போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ஆர்15எக்ஸ்:
ஒப்போ ஆர்15எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக
ஐபோனில் உள்ள நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவரும், பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெறுவதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

கேமரா:
ஒப்போ ஆர்15எக்ஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு இவவற்றுள் அடக்கம். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

விலை மற்றும் பேட்டரி:
இக்கருவியில் 3600எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு இந்த ஒப்போ ஆர்15எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை
ரூ.26,400-ஆக உள்ளது, விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications