ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் ஓப்போ ஆர்15.!
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
விரைவில் ஓப்போ ஆர்15 மற்றும் ஓப்போ ஆர்15 பிளஸ் சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஓப்போ நிறுவனம், மேலும் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஓப்போ ஆர்15 ஸ்மார்ட்போன் மாடல். டூயல் கேமரா மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஆர்15 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்போ ஆர்15 சாதனத்தின் பல்வேறு குறிப்புகள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஓப்போ ஆர்15:
ஓப்போ ஆர்15 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2280 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:
ஓப்போ ஆர்15 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
ஓப்போ ஆர்15 ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 5, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


3365எம்ஏஎச்:
ஓப்போ ஆர்15 ஸ்மார்ட்போனில் 3365எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications