மார்ச் 12: அசத்தலான ஓப்போ ஆர்15 மற்றும் ஆர்15 பிளஸ் அறிமுகம்.!

ஓப்போ R15 மாடலில் டூயல் கேமிரா பின்பக்கமும், அதன் தன்மைகள் 16 மற்றும் 5 மெகாபிக்சல்களை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

|

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் ஓப்போ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களான R15 மற்றும் R15 பிளஸ் ஆகிய மாடல்களை மார்ச் 12 முதல் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

மார்ச் 12: அசத்தலான ஓப்போ ஆர்15 மற்றும் ஆர்15 பிளஸ் அறிமுகம்.!

ஓப்போ நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களில் இந்நிறுவனத்தின் புதிய வெளியீடுகள் குறித்த அதிகாரபூர்வ தகவல்களில் இந்த இரண்டு மாடல்களும் உள்ளன. மேலும் இந்த இரண்டு மாடல்கள் சிகப்பு, பர்ப்பிள் வெள்ளை, மற்றும் மிர்ரர் சிகப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல்களின் பின்பக்கத்தில் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளதாகவும், முன்பக்கம் பெஸல்லெஸ் டிஸ்ப்ளேவுடன் இந்த மாடல்கள் அமைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ:

வீடியோ:

மேலும் இந்த மாடல் குறித்து முழுவிபரங்களையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக வீடியோ ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 9 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் மொபைலை ஸ்வைப் செய்து அதில் உள்ள செயலிகளை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

முன்னதாக ஆண்ட்ராய்டு போன்கள் குறித்த விளக்கங்களை அளிக்கும் TENAA இந்த மாடல்கள் குறித்து கூறுகையில், இந்த போன் 6.28 இன்ச் FHD டிஸ்ப்ளேவை கொண்டது என்றும், இந்த டிஸ்ப்ளேவின் ஸ்க்ரீன் ரெசலூசன் 2280x1080 பிக்சல்ஸ் என்றும், ஆப்பிள் ஐபோன் x மாடலுக்கு இணையான தன்மையை கொண்டது என்றும் அறிவித்துள்ளது. ஆக்டாகோர் குவால்கொம் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசரை கொண்ட இந்த போனின் அட்ரெனா 512GPU என்பது குறிப்பிடத்தக்கது

 கேமிரா

கேமிரா

மேலும் இந்த மாடல் 6GB ரேம் மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 GB வரை ஸ்டோரேஜை அதிகப்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த ஓப்போ R15 மாடலில் டூயல் கேமிரா பின்பக்கமும், அதன் தன்மைகள் 16 மற்றும் 5 மெகாபிக்சல்களை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் முன்பக்கம் 20MP தன்மையுடன் இருப்பதால் தரம் மிகுந்த செல்பி புகைப்படங்களையும் வீடியோ அழைப்புகளையும் பெறலாம்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியா

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியா

மேலும் இந்த மாடலின் பேட்டரி குறித்து பார்த்தோம் என்றால் 3365mAh கொண்டுள்ளது. மேலும் VOOC பிளாஷ் வசதியும் உண்டு. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியா மற்றும் 4G VoLTE, வைபை 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடுத் 5, ஜிபிஎஸ் + GLONASS, USB டைப் C ம் மற்றும் டூயல் சிம் கொண்டது. இந்த போனின் அளவு 155.1 × 75.2 × 7.4 mm கொண்டது மற்றும் இதன் எடை 175 கிராம் எனப்து குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo R15, R15 Plus confirmed to launch on March 12, new video shows multitasking features; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X