இந்தியா: 6.28-இன்ச் டிஸ்பிளேவுடன் ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் நாட்ஸ் டிஸ்பிளே அமைப்பு மற்றும் டூயல் கேமரா ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமேசான் வலைதளத்தில் இன்று முதல் ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,இப்போது ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.28-இன்ச் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம்.

சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 20எம்பி+16எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ
கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வைஃபை வோல்ட்இ, ப்ளூடூத், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு அதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:
ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3,430எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 25,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications