டூயல் கேம்; 20எம்பி செல்பீ; ஆப்பிள் எக்ஸ் வடிவமைப்பு: வேறென்ன வேணும்.?

வெளியான போஸ்டரின்படி, இந்நிகழ்ச்சியானது காலை 8:00 மணியளவில் (இந்திய நேரப்படி 5:30 மணிக்கு ) நடக்கவுள்ளது.

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை வெளிப்படையாக ஆளும் சீன நிறுவனமான சியோமிக்கு, ஓரளவிவு போட்டியை வழங்குமொரு நிறுவனம் - ஒப்போ தான். சியோமியின் மலிவான விலை நிர்ணயம் என்கிற பாணியோடு சேர்த்து, அற்புதமான கேமரா அம்சங்களை - மிக முக்கியமாக செல்பீ கேமராவில் பல - புதுமைகளை புகுத்துவதின் வாயிலாக, ஒப்போ இந்நிலையை அடைந்துள்ளது.

அதை தக்கவைத்துக் கொள்ளவும், சியோமியுடன் போட்டியிடும் முனைப்பிலும் ஒப்போ தொடர்ச்சியான முறையில் ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது வெளியாகுமொரு கருவி தான் - ஒப்போ ஆர் 15.

டூயல் கேம்; 20எம்பி செல்பீ; ஆப்பிள் எக்ஸ் வடிவமைப்பு: வேறென்ன வேணும்.?

வருகிற ​​மார்ச் 31-ஆம் தேதி சீனாவில் நிகழுமொரு அறிமுக விழாவில் ஒப்போ நிறுவனத்தின் ஆர்-தொடர் கருவிகளான ஆர்15 மற்றும் ஆர் 15 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது. வெளியான போஸ்டரின்படி, இந்நிகழ்ச்சியானது காலை 8:00 மணியளவில் (இந்திய நேரப்படி 5:30 மணிக்கு ) நடக்கவுள்ளது.

முழு திரை டிஸ்பிளே

முழு திரை டிஸ்பிளே

கூறப்படும் இரண்டு சாதனங்களுமே, ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ல் காணப்படுவதைப் போலவே முழு திரை டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. பெரும்பாலும் ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டுள்ள இக்கருவிகள் பேட்டரி திறன் மற்றும் சிப்செட் போன்ற அம்சங்களில் மட்டும் சில வேறுபாடுகளை கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி

இதுவரை வெளியான லீக்ஸ் தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன்கள், 2880 × 1080 பிக்சல்கள் அளவிலான தீர்மானம் மற்றும் 19:9 என்கிற திரை விகிதம் கொண்ட 6.28 அங்குல அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ஆர்15 ஆனது மீடியாடெக் ஹீலியோ பி60 எஸ்ஓஇ கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படும் மறுகையில் உள்ள ஒப்போ ஆர் 15 பிளஸ் மாறுபாடு ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

இந்த இரு சிப்செட்டுகளுமே 6ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கலாம். உள்ளடக்க சேமிப்பை பொறுத்தமட்டில், 128 ஜிபி உள் சேமிப்பு இருக்கும். ஆனால் மெமரி விரிவாக்கம் பற்றிய எந்த வார்த்தையும் இல்லை. ஆ15 பிளஸ் ஒரு 3400எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்பட, ஆர்15 ப்ளஸ் ஆனது ஒரு 3450எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இரண்டுமே ஒப்போ நிறுவனத்தின் விஓஓசி (VOOC) பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரு இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். அதாவது ஒரு 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் இரண்டாம்நிலை சென்சார் கொண்டிருக்கும். உடன் சோனி நிறுவனத்தின் ஐஎம்எக்ஸ்519 சென்சாரை அடிப்படியாக கொண்டிருக்கும். முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரு 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

மார்ச் 26-ல் ஒப்போ எப்7

மார்ச் 26-ல் ஒப்போ எப்7

தற்போது வரையிலாக, விளைந்த நிர்ணயம் பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. மார்ச் 31-ஆம் தேதி வெளியிடப்படும்போது தான் அது அறியப்படும். இதற்கிடையில், மார்ச் 26ஆம் தேதி இந்தியாவில், ஒப்போ அதன் எப்7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo R15 to launch in China on March 31: What we know so far. Read more about this is in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X