20எம்பி செல்பீ; 16+20எம்பி ரியர் என ரெட்மீக்கு உடனடி போட்டியாய் களமிறங்கிய ஒப்போ.!

|

நீண்டகாலமாக வதந்திகளில் சிக்கித்தவித்த ஒப்போ ஆர்11எஸ் மற்றும் ஆர்11எஸ் ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நடந்தவொரு நிகழ்வில் அறிமுகமாகியுள்ளது.

20எம்பி செல்பீ; 16+20எம்பி ரியர் என களமிறங்கிய ஒப்போ.!

நேற்று (வியாழன்) தொடங்கப்பட்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 85 சதவீதம் ஸ்க்ரீம்-டூ-பாடி விகிதம் கொண்டு வந்துள்ளது. டிஸ்பிளே, பேட்டரி மற்றும் நினைவக வசதி தவிர இரண்டு கருவிகளுக்கும் ஒரு சில வேறுபாடுகள் மட்டுமே உள்ளது. மற்றபடி ஆர்11எஸ் மற்றும் ஆர்11எஸ் ப்ளஸ் ஆகிய இரண்டுமே அம்சங்கள் மற்றும் வடிவமைபை பொறுத்தவரை ஒரேபோல் தான் இருக்கின்றன.

இந்திய விற்பனை

இந்திய விற்பனை

இப்போது வரை சீனாவில் மட்டுமே கிடைக்கும் இக்கருவிகளின் இந்திய விற்பனை பற்றிய வார்த்தைகள் இல்லை. ஒப்போ நிறுவனத்தின் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் எப்படியொரு செல்பீ அம்சத்தினை முதன்மையாக கொண்டு வெளிவந்துள்ளதோ அதேபோல இக்கருவிகளும் செல்பீயை மையாக கொண்டே களமிறங்கியுள்ளன.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பியூடிப்பை தொழில்நுட்பம்

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பியூடிப்பை தொழில்நுட்பம்

அம்சங்களை பொறுத்தமட்டில், ஒப்போ ஆர்11எஸ் மற்றும் ஆர்11எஸ் ஆகிய இரண்டுமே அதன் பின்பக்கம் இடம்பெற்ற இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. இது மட்டுமல்லாமல், இக்கருவிகள் கேமராக்களில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பியூடிப்பை தொழில்நுட்பம் என்ற அம்சமும் உள்ளடக்கம்.

முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே

முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே

ஒப்போ ஆர்11எஸ் மற்றும் ஆர்11எஸ் ப்ளஸ் ஆனது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. இருப்பினும் சிறிய வித்தியாசங்களை காணமுடியும். குறிப்பாக, ஒப்போ ஆர்11எஸ் டிஸ்பிளே ஒரு 18: 9 விகிதம் மற்றும் 1080x2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.01 அங்குல முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே, கொண்டு வருகிறது.

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி

மறுபுறம், ஆர்11எஸ் ப்ளஸ் ஆனது 1080x2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.43 அங்குல முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இரண்டு தொலைபேசிகளுமே ஒரே வன்பொருள் கொண்டே இயங்குகிறது. அதாவது 1.8ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி மூலம் இயக்கப்படுகின்றன.

256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி

256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி

ஒப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் போது, ஆர்11எஸ் ப்ளஸ் ஆனது 6ஜிபி ரேம் கொண்டு வருகிறது. ஆனால், இரு சாதனங்களுக்கான சேமிப்பகமும் ஒரே மாதிரியாக உள்ளது. அதாவது, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது.

3205எம்ஏஎச், 4000எம்ஏஎச் பேட்டரி

3205எம்ஏஎச், 4000எம்ஏஎச் பேட்டரி

இந்த இரண்டு தொலைபேசிகளும் பேட்டரி அம்சத்தில் வேறுபடுகின்றன. ஆர்11எஸ் ஆனது 3205எம்ஏஎச் பேட்டரி ஒன்றின்கீழ் ஆதரிக்கப்பட மறுகையில் ப்ளஸ் மாறுபாடானது 4000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. உடன் இயக்கருவிகளில் விஓஓசி பாஸ்ட் சார்ஜ் ஆதரவும் உள்ளது. இரண்டு கருவிகளும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலானநிறுவனத்தின் கலர்ஓஎஸ் 3.2 கொண்டு இயங்குகிறது மற்றும் பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர் ஒன்றையும் கொண்டிருக்கும்.

16 + 20 எம்பி

16 + 20 எம்பி

பிரதான அம்சமான கேமராத்துறையை பொறுத்தமட்டில், இரண்டு கருவிகளும் ஒரே ,மாதிரியான சென்சார்களை கொண்டுள்ளன. ஒரு 16-மெகாபிக்சல் ஒரு முதன்மை கேமராவுடன் ஒரு 20 எம்பி இரண்டாம் நிலை கேமரா கேமரா என இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. உடன் 20எம்பி அளவிலான செல்பீ கேமரா ஒன்றையும் கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களும் இரட்டை தொனியில் எல்இடி ப்ளாஷ் அம்சம் கொண்டுள்ளது.

விலை நிர்ணய புள்ளி

விலை நிர்ணய புள்ளி

விலையிடல் புள்ளிகளை பொறுத்தமட்டில், ஆர்11எஸ் ஆனது சுமார் ரூ.30,000/- என்ற புள்ளியை எட்டலாம். ஆர்11எஸ் ஆனது மொத்தம் மூன்று நிறங்களில் - கருப்பு, ஷாம்பெயின் மற்றும் சிவப்பு - வெளியாகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் சிவப்பு நிற மாறுபாடு மட்டும் அதிக விலைக்கு, அதாவது சுமார் ரூ.31,300/- என்ற விலை நிர்ணய புள்ளியை எட்டலாம். மறுகையில் உள்ள ப்ளஸ் மாறுபாடானது கருப்பு மற்றும் தங்கம் என்ற இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இது தோராயமாக ரூ.36,000/-க்கு விற்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
Oppo R11s, R11s Plus announced with 20MP front camera: Specs, features and price. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X