4ஜிபி ரேம், டூயல் ரியர் கேம் உடன் ஒப்போ ஆர்11.!
புத்தம் புதிய ஒப்போ ஆர்11:அண்ட்ராய்டு 7.1.1.!
ஒப்போ நிறுவனத்தின் மகவும் அருமையான செல்பீ எக்ஸ்பெர்ட் வரிசையில் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட்போன் தான் ஒப்போ11, சீனாவில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்படும் ஒப்போ ஆர்11பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்புகள் கொண்டுள்ளது. மேலும் ஏஎன்டியுடியு என்ற முக்கிய பட்டியலில் இணைந்துள்ளது ஒப்போ ஆர்11. சீனாவில் பல விளம்பர பலகைகள் ஒப்போ ஆர்11க்கு வைக்கப்பட்டுள்ளது, மேலும் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 6 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை எனக் கூறப்படுகிறது. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் இதனுடன் கொரில்லா கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

கேமரா:
ஒப்போ ஆர்11 பொருத்தவரை 20 மெகா பிக்சல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம்நிலை சென்சார் பின்புற கேமராவில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர்:
அக்டோ கோர் 2.2 ஜிஎச்இசெட் ஸ்னாப்ட்ராகன் 626 எஸ்ஒசி கொண்டுள்ளது. மேலும் அண்ட்ராய்டு 7.1.1 மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications