20எம்பி செல்பீ கேம் உடன் டூயல் பின்புற கேமராக்களுடன் அசத்தலான ஆர்11.!
இக்கருவி சார்ந்த இதர அம்சங்கள் மற்றும் தோராயமான விலை நிர்ணயம் ஆகியவை விவரங்களை கீழ் காணலாம்.
பல கசிவுகளுக்குப் பிறகு, ஓப்போ ஆர்11 இறுதியாக அதன் அதிகாரப்பூர்வ அம்சங்களை வெளியிட்டுள்ளது. வெளியான அம்சங்களிலேயே மிகவும் பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் மற்றும் அதன் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா திகழ்கிறது.
ஜூன் 10 அதாவது வரும் சனிக்கிழமையன்று சீனாவில் ஒப்போ ஆர் 11 கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அதன் உத்தியோகபூர்வ விலை இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. இக்கருவி சார்ந்த இதர அம்சங்கள் மற்றும் தோராயமான விலை நிர்ணயம் ஆகியவை விவரங்களை கீழ் காணலாம்.

மெல்லிய உலோக யூனிபாடி
இருப்பினும், ஒப்போ ஆர்11 தோராயமாக ரூ.31,200/- என்ற விலை நிர்ணயம் கொண்டிருக்கலாம் என்று சமீபத்திய வதந்திகள் தெரிவிக்கின்றன. பிளாக், தங்கம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய மூன்று வண்ண வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஒரு மெல்லிய உலோக யூனிபாடி கொண்ட இக்கருவி அதன் கைரேகை ஸ்கேனரை மறைமுகமாக வைத்திருக்கும் ஹோம் பொத்தானுடன் கொண்டுள்ளது

இரட்டை கேமரா அமைப்பு
பின்புறத்தின் மையத்தில் ஒப்போ லோகோவுடன் மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. ஒப்போ ஆர் 11 கருவியின் இடது விளிம்பில் வால்யூம் பொத்தான் அமர்ந்திருக்கும்போது, ஆற்றல் பொத்தானை வலது விளிம்பில் காணப்படுகிறது. 3.5மிமீ ஆடியோ ஜாக் ஸ்மார்ட்போனின் கீழே விளிம்பில் அமர்ந்திருக்கிறது.

டிஸ்ப்ளே
ஒப்போ ஆர்11 ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் அடிப்படையிலான கலர் ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, மேலும் 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 660 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 64 ஜிபி உள் சேமிப்பு நினைவகத்தையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது.

இரட்டை-எல்இடி ப்ளாஷ்
கருவியின் பெரிய சிறப்பம்சமாக ஒரு 20 மெகாபிக்சல் மற்றும் ஒரு 16-மெகாபிக்சல் சென்சார் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு, இரட்டை-எல்இடி ப்ளாஷ் கொண்டு வருகிறது. இது 2எக்ஸ் ஆப்டிகல் ஸூம், குவால்காம் ஸ்பெக்ட்ரா ஐஎஸ்பி, போர்ட்ரேட் பயன்முறை மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது.

2900எம்ஏஎச் பேட்டரி
முன்பக்க கேமராவை பொறுத்தம்மட்டில் செல்பீ மற்றும் வீடியோ அரட்டைகளுக்கான ஒரு 20 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. ஒரு 2900எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் இக்கருவி 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆகிய இணைப்பு விருப்பங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications