கீக்பென்ஞ் பட்டியலில் ஒப்போ ஆர் 11 : என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கலாம்.?
அண்மைய ஆர் 11 அம்சங்கள் சார்ந்த ஷீட் கசிவை தொடர்ந்து, புதிய கீக்பெஞ்ச் பட்டியலின் கீழ் இந்த கருவி சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
புதுமைகளை புகுத்தி ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புரட்சிகளை உண்டாக்கும் பாணி கொண்ட ஒப்போ நிறுவனத்திடம் இருந்து அடுத்ததாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் ஆர்11 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் அனுதினமும் ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளது.
அப்படியாக, சமீபத்தில் ஒப்போ ஆர் 11 பற்றிய கசிவுகள் மற்றும் வதந்திகளின்கீழ் கருவியின் ஏராளமான அம்சங்கள் மற்றும் குறிப்புகள் கீக்பெஞ்ச்சில் காணப்பட்டு வந்த வண்ணம் உள்ளது.

அண்மைய ஆர் 11 அம்சங்கள் சார்ந்த ஷீட் கசிவை தொடர்ந்து, புதிய கீக்பெஞ்ச் பட்டியலின் கீழ் இந்த கருவி சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது, மற்றும் இது ஆக்டா-கோர் சிபியூ உடன் 1.8ஜிகாஹெர்ட்ஸ், 4ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது என்பது வெளிப்பட்ட்டுள்ளது.
மேலும் சமீபத்திய வதந்திகள் படி, ஓப்போ ஆர்11 ஒரு 5.5 இன்ச் முழு எச்டி அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் கலர்ஸ்ஓஎஸ் 3.1 யூஐ உடன் வரும் என்றும் நம்பப்படுகிறது.

கேமரா துறையை பொறுத்தமட்டில் பின்புறத்தில் 20எம்பி மற்றும் 16எம்பி டூயல் கேமிரா அமைப்பு ஆகியவற்றை கொண்டுருக்கும் இந்த கைபேசிமுன்பக்கம் மற்றொரு 20எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. லீக்ஸ் தகவலின் கீழ் கசிந்த விலை விவரங்கள் வரும், ஒப்போ ஆர்11 ரூ.,28370/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் மற்றும் ஜூன் 10-ஆம் தேடி சீனாவில் இந்த கைபேசிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் வெளியான தஃவளின்கீழ் இக்கருவி 6 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே (1080-1920) கொண்டிருக்கும் உடன் கொரில்லா கண்ணாடி பொருத்தப்பட்டுருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டு 64 ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் உடனான 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்கும் என்றும் கூறியுது.
உடன் ஆக்டாகோர் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஸ்னாப்ட்ராகன் 626 எஸ்ஒசி மூலம் இயங்கும் மற்றும் மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெறுமீ என்றும் கூறப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications