அடுத்த 4 வருஷத்துக்கு எந்த போனும் வாங்க வேணாம்.. புது வகையான வாக்குறுதி உடன் OPPO-வின் லேட்டஸ்ட் போன்!
பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் (Budget Smartphones) உள்ள முக்கியயான பிரச்சனை என்னவென்றால்.. நாளுக்கு நாள் அவற்றின் ஒட்டுமொத்த செயல்திறன் (Overall Performance) மெல்ல மெல்ல குறைந்துகொண்டே போகும். ஒருகட்டத்தில், இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால்.. 2 ஆண்டுகளில் புது போன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்!
பெரும்பாலான ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள் (High-end Smarphones) பல ஆண்டுகளுக்கு திருப்திகரமான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் மூன்றாவது ஆண்டை தொடுவதற்கே போராடுகின்றன என்பதே உண்மை. அதிர்ஷ்டவசமாக, சில நிறுவனங்கள் இந்த சிக்கலை கவனத்தில் எடுத்து அதை தீர்ப்பதற்கான வேலைகளை செய்கின்றன.

அதிலொரு நிறுவனம் தான் ஒப்போவும், அதன் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனான ஒப்போ எஃப்23 (OPPO F23 5G) மாடலும். ஒப்போவின் கூற்றுப்படி, இந்த பட்ஜெட்-பிரெண்டலி ஸ்மார்ட்போன் (Budget Friendly Smartphone) ஆனது 48 மாதங்களுக்கான, அதாவது 4 ஆண்டுகளுக்கான ஸ்மூத் மற்றும் லேக்-ஃப்ரீ (Smooth and Lag-free) அனுபவத்தை உறுதி செய்கிறது.
மற்ற நிறுவனங்கள் டிசைன் (Design), டிஸ்பிளே (Display), ப்ராசஸர் (Processor), கேமரா (Camera) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி (Fast Charging Battery) போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தும் நேரத்தில் ஒப்போவானது நான்கு ஆண்டுகளுக்கு ஸ்மூத் ஆன மற்றும் லேக்-ஃ ப்ரீ அனுபவம் என்கிற புது வகையான வாக்குறுதியை முன்வைத்துள்ளது.
இதெப்படி சாத்தியம்? ஒப்போ எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களின் கலவையின் அடிப்படையில் தான் ஒப்போ இந்த வாக்குறுதியை அளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அப்படி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்தியாவில் என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? என்னென்ன விற்பனை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:
ஒப்போ எஃப்23 5ஜி அம்சங்கள்: ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனானது 3டி கர்வ்டு டிசைன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை ஆதரிக்கும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் உடன் வருகிறது. இதிலுள்ள ரேம் விரிவாக்க தொழில்நுட்பம் (RAM Expansion Technology) பயன்படுத்தி இதன் ரேம்-ஐ அதிகபட்சமாக 16ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதாவது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 8ஜிபி-ஐ ரேம் ஆக கடன் வாங்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, 64எம்பி ஏஐ ஷூட்டர் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மைக்ரோலென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
விலை மற்றும் விற்பனை சலுகைகள்: ஒப்போ எஃப்23 5ஜி-யின் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. ஒப்போ ஸ்டோர் (OPPO Store) மற்றும் அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் மீது எக்கச்சக்கமான விற்பனை சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா மற்றும் பிற முன்னணி வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தினால் (மே 18 முதல் மே 31 வரை) 10% கேஷ்பேக் மாறட்டும் 6 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களை பெறுவீர்கள். மேலும் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் மீது ரூ.2500 வரையிலான எக்ஸ்சேஞ்ச் + லாயல்டி போனஸும் கிடைக்கும்.
மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.1500 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். மேலும் மே 18 முதல் மே 23 வரை, ஒப்போ எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒப்போ என்கோ ஏர்2ஐ இயர்பட்ஸ்ஸை (Oppo Enco Air2i Earbuds) வாங்கினால், குறிப்பிட்ட இயர்பட்ஸ் ஆனது ரூ.1799 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








