ஒட்டுமொத்த மார்க்கெட்டும் OPPO பாக்கெட்ல.. 7500mAh பேட்டரி, 200MP டெலி கேமரா, 16GB ரேம் உடன் புது போன்!
ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரிஸ் அறிமுகமாகி உள்ளன. இதன் கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 (Oppo Find X9) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பொதுவான அம்சங்களை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஆகிய இரண்டுமே மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட்டால் இயக்கப்படுகின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) உடன் வருகின்றன.

மேலும் இரண்டு போன்களிலும் ஹசல்பிளாட் (Hasselblad) ஆதரவு கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் 50 மெகாபிக்சல் சோனி LYT 828 ப்ரைமரி சென்சார்கள் உள்ளன. மேலும் இரண்டு மாடல்களுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்களுடன் வருகின்றன.
முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ வேரியண்டின் கேமரா செட்டப்பில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் பேக் செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் வெண்ணிலா ஒப்போ பைண்ட் எக்ஸ்9 வேரியண்ட்டில் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா பேக் செய்யப்பட்டு உள்ளது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9,ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் மற்ற அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் 6.78-இன்ச் 1.5கே LTPO டிஸ்பிளே
- வெண்ணிலா மாடலில் 6.59-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- இரண்டும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கின்றன மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்-ஐ வழங்குகின்றன
- ஃபுல்-ஸ்க்ரீன் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-On Display - AOD) அம்சத்தையும் கொண்டுள்ளன.
- வெண்ணிலா மாடலில் 50-மெகாபிக்சல் சோனி LYT-828 ப்ரைமரி சென்சார் + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் + 50-மெகாபிக்சல் சாம்சங் ஜேஎன்5 அல்ட்ராவைடு கேமரா உள்ளன; முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது
- ப்ரோ மாடலில் 3எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்கள் உடன் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் உடன், வெண்ணிலா மாடலில் உள்ள அதே ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பேக் செய்யப்பட்டு உள்ளன; முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் செல்பீ சென்சாரை கொண்டு உள்ளது.
- ப்ரோ மற்றும் வெண்ணிலா மாடல்கள் முறையே 7500mAh மற்றும் 7025mAh பேட்டரியை பேக் செய்கின்றன
- இரண்டும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன
- கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட்கள் ஆகியவைகளை கொண்டுள்ளன.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள்:
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.54,300 க்கும், 16 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி ஆப்ஷன்கள் முறையே தோராயமாக ரூ.58,000 மற்றும் ரூ.61,700 க்கும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனில் 16 ஜிபி + 512 ஜிபி மற்றும் 16 ஜிபி + 1 டிபி ரேம் ஆப்ஷன்களும் உள்ளன. அவைகள் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.65,400 மற்றும் ரூ.71,600 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன
மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.65,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதேபோல 12ஜிபி + 512ஜிபி, 16ஜிபி + 512ஜிபி மற்றும் 16ஜிபி + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே (தோராயமாக) ரூ.70,300, ரூ.74,100) மற்றும் ரூ.82,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களுமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இப்போது வரை இந்திய அறிமுக தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








