மீண்டும் மீண்டும் அசத்தும் ஒப்போ : ரூ.12,990/-க்கு இதற்கு மேல் வேறென்ன வேண்டும்.?
"ஆஹோ ஓஹோ"வென்று புகழும் அளவு இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன.?
ஒப்போ நிறுவனம் அதன் சூப்பர் பட்ஜெட் சாதனமான ஒப்போ ஏ71 ஸ்மார்ட்போனை, அதன் ஏ தொடர் ஸ்மார்ட்போன் வரிசையின் கீழ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.12,990/- என்ற விலைக்கு இதற்கு மேல் வேறென்ன அம்சங்கள் வேண்டும் என்று கேட்குமளவு திறன்களை கொண்டுள்ள ஒப்போ ஏ71 தற்போது இ- காமர்ஸ் தளங்களான ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கின்றது.

பிளாக் அண்ட் கோல்ட் என்ற இரண்டு வண்ண மாதிரிகளில் வெளியாகியுள்ள ஒப்போஏ71முதலில் பாகிஸ்தான் மற்றும் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. "ஆஹோ ஓஹோ"வென்று புகழும் அளவு இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன.?

மூன்று கேப்பாசிட்டிவ் டச் பொத்தான்கள்
வடிவமைப்பு அடிப்படையில், ஏ71 ஸ்மார்ட்போனின் உலோக யூனிபாடி இதர ஒப்போ ஸ்மார்ட்போன்களுடன் ஒற்றுப்போகின்றது. சாதனத்தின் முன்பக்கம் கைரேகை சென்சார் இல்லாத மூன்று கேப்பாசிட்டிவ் டச் பொத்தான்கள் கொண்டுள்ளது. இதன் விலை நிர்ணயத்தையும், இதர அம்சங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் கைரேகை சென்சார் இல்லை என்பது ஒரு பொருட்டாகவில்லை என்றே தோன்றுகிறது.

டிஸ்ப்ளே
ஒரு 5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ள ஒப்போ ஏ71 ஆனது 64-பிட் மீடியா டெக் எம்டி6750 ஆக்டா-கோர் எஸ்ஓசி உடனான 1.5ஜிகாஹெர்ட்ஸ், கிராபிக்ஸிற்காக ஒரு மாலி- டி860 ஜிபியூ உடன் இணைந்து இயங்குகிறது.

சேமிப்பு
3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ள ஒப்போ ஏ71, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது.

கேமரா
எல்இடி ஃப்ளாஷ், பிடிஏஎப் மற்றும் எப் / 2.2 துளையுடனான 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும் மறுபுறம் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பீக்களுக்கான எப் / 2.4 துளையுடனான ஒரு 5 மெகாபிக்சல் கேமராவும் கொண்டுள்ளது. இதன் முன்பக்க கேமராவில் பில்டர்ஸ், செல்பீ பனோரமா மற்றும் பொக்கே விளைவு ஆகிய அம்சங்களும் இடம்பெறுகிறது.

இணைப்பு விருப்பங்கள்
இரட்டை சிம் ஆதரவு கொண்ட இக்கருவியின் இதர இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் - 4ஜி எல்டிஇசி, வோல்ட், ப்ளூடூத் 4.0, வைஃபை, யூஎஸ்பி ஓடிஜி ஆகியவைகளை வழங்குகிறது. 3,000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 3.1 மேல் அடுக்கு கொண்டு இயங்குகிறது


Click it and Unblock the Notifications