Home
Mobile

இனி வீட்டுல இருக்குற எல்லாருக்கும் 5ஜி போன்.. வாய் பிளக்க வைக்கும் விலையில் OPPO A3 5G அறிமுகம்!

ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான ஏ-சீரீஸின் கீழ் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது ஒப்போ ஏ3 5ஜி (Oppo A3 5G) ஸ்மார்ட்போனாகும். இது மிகவும் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி (Oppo A3x 5G) ஸ்மார்ட்போனுடன் பெரும்பாலான அம்சங்களை பகிர்ந்துகொள்கிறது. இருப்பினும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. அதென்ன வேறுபாடுகள்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது மென்மையான 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1000 nits peak brightness) உடனான 6.67-இன்ச் அளவிலான எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது மாலி-ஜி 57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) உடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு மிட் - ரேன்ஜ் சிப்செட் ஆகும்.

வாய் பிளக்க வைக்கும் விலையில் OPPO A3 5G அறிமுகம்!

இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விர்ச்சுவல் ரேம் விரிவாக்க அம்சத்துடன் (Virtual RAM Extension Feature) 6ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 128ஜிபி ஈஎம்எம்சி 5.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது கலர்ஓஎஸ் 14.0.1 (ColorOS 14.0.1) ஓஎஸ்- ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 14 அவுட் பாக்ஸ் (Android 14 Out of box) மூலம் இயங்குகிறது.

ஒப்போ ஏ3 5ஜி மற்றும் ஒப்போ ஏ3எக்ஸ் 5ஜி ஆகிய இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு - ரியர் கேமரா செட்டப்பில் (Rear Camera Setup) உள்ளது. ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆட்டோஃபோகஸுடன் (Autofocus) கூடிய சிங்கிள் 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் மேம்படுத்தப்பட்ட லோ-லைட் செயல்திறனுக்காக ஒரு எல்இடி ஃபிளாஷ் (LED Flash) ஆகியவற்றை கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒப்போ ஏ3 எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் சிங்கிள் 8எம்பி ரியர் கேமரா மட்டுமே உள்ளது.

முன்பக்க கேமராவை பொறுத்தவரை ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டிஸ்பிளேவில் உள்ள கேமரா பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் 5எம்பி சென்சாரை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 5,100mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் ஒப்போவின் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் (SUPERVOOC Fast Charging Technology) ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை 5, ப்ளூடூத் 5.3, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. உலகளாவிய வேரியண்ட்டில் இருக்கும் என்எப்சி (NFC) செயல்பாடு இந்திய வேரியண்ட்டில் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இராணுவ-தர ஷாக் ரெசிஸ்டன்ஸ் ( military-grade shock resistance) மற்றும் கூடுதலாக லிக்வுட் ரெசிஸ்டன்ஸையும் (liquid resistance) கொண்டுள்ளது. செக்யூரிட்டி அம்சங்களை பொறுத்தவரை இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) மற்றும் பேஸ் அன்லாக் (Face unlock) ஆகிய இரண்டையுமே கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 187 கிராம் மற்றும் 7.7 மிமீ தடிமனை கொண்டுள்ளது.

ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஒப்போ ஏ3 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓஷன் ப்ளூ மற்றும் நெபுலா ரெட் (Ocean Blue and Nebula Red) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் ஒப்போ இந்தியா இணையதளம் (OPPO India Website) வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Launched New Budget 5G Phone in India Check Out Oppo A3 5G Price Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X