Home
Mobile

பதிலடினா இப்படி இருக்கணும்! பல Realme, Redmi போன்கள் காலி! பக்கா பட்ஜெட் விலையில் புதிய OPPO 5G போன் அறிமுகம்!

ஒப்போ (OPPO) நிறுவனம் பக்காவான பட்ஜெட் விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ரெட்மி (Redmi ) மற்றும் ரியல்மி (Realme) நிறுவனங்களின் பட்ஜெட்-விலை 5ஜி போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

என்ன மாடல்? ஒப்போவின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக ஒப்போ ஏ59 5ஜி (Oppo A59 5G) மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில தினங்களாக எக்ஸ் தளம் வழியாக டீஸ் செய்யப்பட்டு வந்த ஒப்போ ஏ59 5ஜி இன்று (டிச.22) இந்தியாவில் அறிமுகமானது.

பக்கா பட்ஜெட் விலையில் புதிய OPPO 5G போன் அறிமுகம்!

இது கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ ஏ58 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வெளிவருகிறது. ஒப்போ ஏ59 5ஜி ஸ்மார்ட்போனின் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனை? என்னென்ன அறிமுக சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

ஒப்போ ஏ59 5ஜி என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது 750 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 96% ஹை கலர் கேமட், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸை அடிப்படையாக கொண்டு ஒப்போவின் இன்-ஹவுஸ் கலர்ஓஎஸ் 13.1 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

பக்கா பட்ஜெட் விலையில் புதிய OPPO 5G போன் அறிமுகம்!

மேலும் ஒப்போ ஏ59 5ஜி ஸ்மார்ட்போன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU), 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராவை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எஃப்/2.2 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் மெயின் கேமரா + எஃ ப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2 மெகாபிக்சல் பொக்கே கேமரா உள்ளது. முன்பக்கத்தில் எஃ ப்/2.0 அபெர்க்ஷர் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பக்கா பட்ஜெட் விலையில் புதிய OPPO 5G போன் அறிமுகம்!

பேட்டரி மற்றும் சார்ஜிங் டிப்பார்ட்மென்ட்டை பொறுத்தவரை, இது 33W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒப்போவின் கூற்றுப்படி, இது வெறும் 30 நிமிடங்களில் ஸ்மார்ட்போனின் பெட்டராயை 52 சதவீதம் வரை சார்ஜ் செய்யும். சுவாரசியமாக இது யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உடன் வருகிறது

ஒப்போ ஏ59 5ஜி-யின் விலை என்ன? இது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும். இது 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வாங்க கிடைக்கும். ஆனால் இதன் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஒப்போ ஏ59 5ஜி எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இது டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஒப்போ ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் சில்க் கோல்ட் (Silk Gold) மற்றும் ஸ்டாரி பிளாக் (Starry Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

ஒப்போ ஏ59 5ஜி மீது என்னென்ன விற்பனை / அறிமுக சலுகைகள் கிடைக்கிறது? ஒப்போவின் கூற்றுப்படி, எஸ்பிஐ கார்டு, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு, ஏயு ஃபைனான்ஸ் பேங்க் மற்றும் ஒன் கார்டு வழியாக ரூ.1500 கேஷ்பேக் மற்றும் 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் அணுக கிடைக்கும்.

ஒப்போ ஏ59 5ஜி ஸ்மார்ட்போனிற்கான இஎம்ஐ (EMI) விருப்பமானது ரூ.1,699 முதல் தொடங்குகிறது. கூடுதலாக, மை ஒப்போவின் (My OPPO) பிரத்தியேக சலுகையின் ஒரு பகுதியாக, ஒப்போ ஏ59 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வடிக்கையாளர்களுக்கு உறுதியான பரிசுகளை (Assured gifts) வெல்ல முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Launched New 5G Smartphone Under Rs 15000 in India Check Oppo A59 5G Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X