Home
Mobile

7வது மாடல் அறிமுகம்.. அடுக்கி தள்ளும் OPPO.. 50MP OIS கேமரா, 6500mAh பேட்டரி, 80W சார்ஜிங் உடன் புதிய போன்!

ஒப்போ (OPPO) நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில் ரெனோ 15 எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஏற்கனவே உள்ள ரெனோ 15 சீரீஸில் இணைகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த சீரிஸின் கீழ் ஏற்கனவே ரெனோ 15, ரெனோ 15 ப்ரோ, ரெனோ 15 ப்ரோ மேக்ஸ், ரெனோ 15 ப்ரோ மினி, ரெனோ 15சி மற்றும் ரெனோ 15எப் மாடல்கள் உள்ளன.

இப்போது 7வது மாடல் ஆக ரெனோ 15 எப்எஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை ஒப்போவின் அதிகாரப்பூர்வ போலந்து இணையதளத்தில் ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி மாடலுக்கான விலை - இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.40,600 ஆக உள்ளது. இத்தாலியில் இதே வேரியண்ட் தோராயமாக ரூ.50,200 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

50MP OIS கேமரா, 6500mAh பேட்டரி, 80W சார்ஜிங் உடன் புதிய OPPO போன்!

இந்த ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில் அரோரா ப்ளூ மற்றும் ட்விலைட் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இப்போதைக்கு ஒப்போ அதன் ரெனோ 15 சீரிஸின் கீழ் 4 மாடல்களை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரெனோ 15 எப்எஸ் 5ஜி மாடலின் இந்திய அறிமுகம் குறித்து எந்த விவரங்களும் இல்லை.

ஒப்போ ரெனோ 15 எப்எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.57-இன்ச் AMOLED FHD+ டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 5ஜி சிப்
- ஓஐஎஸ் 50-மெகாபிக்சல் ஸ்மார்ட்சென்ஸ் SC532HS ப்ரைமரி கேமரா
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
- 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 சென்சார் (செல்பீ கேமரா)
- 6500mAh பேட்டரி
- 80W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் ஒப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன்களின் விலை முறையே ரூ.48,999 மற்றும் ரூ.53,999 என்று நிர்ணய செய்யப்பட்டுள்ளது

ரெனோ 15 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 15 ப்ரோ மினி 5ஜி விலைகள் முறையே ரூ.67,999 மற்றும் ரூ.59,999 இல் தொடங்குகிறது.பின்னர் 4வதாக அறிமுகமான ஒப்போ ரெனோ 15சி 5ஜி-யின் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.37,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று ஒப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்போ ரெனோ 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.57-இன்ச் FHD+ (2372 × 1080 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- குவால்காம் 4 என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்
- 12ஜிபி வரை LPDDR4x ரேம்
- 256ஜிபி வரை UFS 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கலர்ஓஎஸ் 16
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்
- எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 30 பிரேம்களில் 4K ரெசல்யூஷன் வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் கேமரா
- 30 பிரேம்களில் 4K வீடியோ ரெக்கார்டிங்

- 7,000mAh பேட்டரி
- 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்
- 5ஜி SA மற்றும் NSA
- டூயல் 4G VoLTE
- வைஃபை 802.11 ஏசி
- ப்ளூடூத் 5.4
- IP66, IP68, மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- அளவீட்டில் 158.18×74.93×8.14மிமீ மற்றும் எடையில் 195 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 15 FS 5G Launched With 6,500mAh Battery, 80W Fast Charging and Snapdragon 6 Gen 1 SoC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X