ஓஹோ OPPO.. அசால்ட் விலையில் 2 புதிய 5G போன்கள் அறிமுகம்.. 7000mAh பேட்டரி, 45W சார்ஜிங், 50MP கேமரா!
ஒப்போ (OPPO) நிறுவனம் அமைதியாக 2 புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவைகள் ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி (Oppo A6i Plus 5G) மற்றும் ஒப்போ ஏ6வி 5ஜி (Oppo A6v 5G) மாடல்கள் ஆகும்.
ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி மற்றும் ஒப்போ ஏ6வி 5ஜி முக்கிய அம்சங்கள்: இந்த இரண்டு 5 போன்களுமே டூயல் சிம் கார்டு ஆதரவுடன் வருகிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 6.75-இன்ச் HD+ (720 x 1570 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேக்களை கொண்டு உள்ளன.

இதன் டிஸ்பிளேக்கள் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி , 1125 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 100 சதவீதம் sRGB, 16.7 மில்லியன் கலர்களுக்கான ஆதரவு மற்றும் 240Hz வரைடச் சாம்ப்ளிங் ரேட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ள.
மேலும் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே MediaTek Dimensity 6300 சிப்செட்டால் இயக்கப்படுகின்றன. இந்த சிப்செட் 2 செயல்திறன் கோர்கள் மற்றும் ஆறு செயல்திறன் கோர்களை கொண்டுள்ளது, இது 2.4GHz பீக் கிளாக்டு ஸ்பீடை வழங்குகிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளன. அதில் 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமராக்கள் மற்றும் 2-மெகாபிக்சல் (f/2.4) மோனோக்ரோம் கேமராக்கள் உள்ளன.
முக்கிய வேறுபாடாக ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 8-மெகாபிக்சல் (f/2.0) செல்பீ கேமரா உள்ளது. மறுகையில் உள்ள ஒப்போ ஏ6வி 5ஜி ஸ்மார்ட்போனில் 5-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா உள்ளது. இரண்டு போன்களுமே 1080p/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறனை கொண்டுள்ளன.
இன்னொரு முக்கிய வேறுபாடு பேட்டரியில் உள்ளது. ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஒப்போ ஏ6வி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மாட்போன்களும் 45W SuperVOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன.
மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்களுடன் வருகின்றன. அளவீடுகளில் ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி மற்றும் ஒப்போ ஏ6வி 5ஜி ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டுமே 166.6x78.51x8.61மிமீ பரிமாணங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஏ6ஐ 5ஜி மாடல் சுமார் 216 கிராம் எடையுள்ளதாக உள்ளது. ஏ6வி 5ஜி மாடல் மாடல் சற்று இலகுவானதாக உள்ளது, இது சுமார் 212 கிராம் எடையை கொண்டுள்ளது.
ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி மற்றும் ஒப்போ ஏ6வி 5ஜி விலை விவரங்கள்: சீனாவில் ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ. 20,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஒப்போ ஏ6வி 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.16,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இவ்விரு புதிய ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன்களும் எப்போது இந்தியா உட்பட மற்ற சந்தைகளுக்கு வரும் என்பது குறித்த விவரங்கள் இல்லை. ஆனால் இவைகள் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications








