64எம்பி ரியர் கேமரா, 33 வாட் பாஸ்ட் சாரஜிங் உடன் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட், 64எம்பி ரியர் கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக செயல்படும். அதேபோல்ColorOS சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தத சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகண்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள்அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளத இந்த புதியஸ்மார்ட்போன் மாடல்.

இரட்டை சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 5, புளூடூத்,ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஆனால் ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம்.மேலும் ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ11எஸ்
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப்பார்ப்போம்.ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ColorOS 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகா கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஒப்போ 11எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ11எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஸ்மர்ரட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications