விலை மிட் ரேஞ்ச்., அம்சம் டாப் லெவல்- வருகிறது ஒப்போ கே9 எக்ஸ் ஸ்மார்ட்போன்: தட்டித் தூக்கலாமா?

|

ஒப்போ அடுத்ததாக இரண்டு ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதற்கான பணியில் ஒப்போ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒப்போ ரெனோ 7 சீரிஸ அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கான பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஒப்போ கே9எக்ஸ் ஆக இருக்கும் எனவும் இது இரண்டு சான்றிதழ் பட்டியலில் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒப்போ கே9 எக்ஸ் ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 900 சிப் மூலம் இயக்கப்படும் அடுத்த மிட் ரேஞ்ச் சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஒப்போ கே9 எக்ஸ் விவரக்குறிப்புகள்

ஒப்போ கே9 எக்ஸ் விவரக்குறிப்புகள்

ஒப்போ கே9 எக்ஸ் விவரக்குறிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒப்போ கே9எக்ஸ் ஆனது பிசிஜிஎம்10 மாடல் எண் உடன் காணப்பட்டது. சீன டீனா மற்றும் 3சி சான்றிதழ் நிறுவனங்களில் இந்த சான்றிதழ் காணப்படுகிறது. இந்த போன் 09-கே பிராண்டிங் உடன் காணப்பட்டுள்ளது. ஒப்போ கே9 தொடரின் கீழ் அறிமுகமாகும் என பரிந்துரைக்கிறது. இந்த ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போனாக சந்தையில் வரும் என சீன டிப்ஸ்டர் தளம் தெரிவிக்கிறது.

டீனா சான்றிதழ்

டீனா சான்றிதழ்

ஒப்போ கே9எக்ஸ் ஸமார்ட்போனானது டீனா சான்றிதழில் 162.5 x 74.8 x 8.8mm அளவீடுகள் மற்றும் 191 கிராம் எடையுடன் இருக்கும் என கூறப்படுகிறது. ஒப்போ போன் ஆனது 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் விருப்பங்களுடன் வரும் எனவும் இது 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விருப்பத்துடன் வருகிறது. ஹூட்டின் கீழ் கலர் ஓஎஸ் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்கின் ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

ஒப்போ கே9 எக்ஸ் ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை கொண்டிருக்கும் என சான்றிதழ் தெரிவிக்கிறது. ஒப்போ கே9 ஸ்மார்ட்போன் குறித்து அறிக்கை வதந்திகள் தெரிவிக்கும் கருத்துகளை பார்க்கையில், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 6.5 இன்ச் எல்சிடி பேனலுடன் வரும் என கூறப்படுகிறது.

64 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா

64 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா

ஒப்போ கே9எக்ஸ் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஆதரிக்கும் என கூறப்படுகிறது. மிக முக்கியமான 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது. டைமன்சிட்டி 900 சிப்செட்டில் இருந்து ஃபோன் சக்தியை பெறுவதாகக் கூறப்படுகிறது. ஒப்போ கே9 எக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ள கேமராக்கள் குறித்து பார்க்கையில் இது 64 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

டிசம்பர் 12 ஆம் தேதி அறிமுகம்

டிசம்பர் 12 ஆம் தேதி அறிமுகம்

ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போனானது டிசம்பர் 12 ஆம் தேதி அறிமுகமாகும் என சீன டிப்ஸ்டர் தளம் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை சுமார் ரூ.17,456 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை 1699 சிஎன்ஒய் இந்திய மதிப்புப்படி ரூ.19785 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை சிஎன்ஒய் 1899 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு குறித்து பார்க்கையில் இது ரூ.22,114 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது ஒப்போ கே9எக்ஸ் ஸ்மார்ட்போன் மற்றொரு மிட் ரேஞ்ச் சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OPPO K9x Smartphone Might Launching with Another Mid Range Level: Expected Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X