Home
Mobile

ஸ்னாப்டிராகன் 7778ஜி சிப்செட் வசதியுடன் ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 7778ஜி சிப்செட் வசதியுடன் ஒப்போ கே9எஸ் அறிமுகம்.!

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனில் 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஎஃப்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,412 பிக்சல் தீர்மானம், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.4ஜிகாஹெர்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சிப்செட் வசதியைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உட்பட
பல்வேறு அமசங்களுக்கு தகுந்தபடி மிக வேகமாக செயல்படும் ஒப்போ கே9எஸ். அதேபோல் மீடியாடெக் சிப்செட் விட இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மிக அருமையாக செயல்படும்.

ஸ்னாப்டிராகன் 7778ஜி சிப்செட் வசதியுடன் ஒப்போ கே9எஸ் அறிமுகம்.!

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக துல்லியமான புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனின் எடை 199 கிராம் என்று கூறப்படுகிறது.மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன்.

ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 6, ப்ளூடூத் வி 5.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன். மேலும் மேஜிக் பர்பில் க்விக்சாண்ட், நியான் சில்வர், அப்சிடியன் வாரியர்
நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.17,500-ஆக உள்ளது.

ஸ்னாப்டிராகன் 7778ஜி சிப்செட் வசதியுடன் ஒப்போ கே9எஸ் அறிமுகம்.!

இந்த ஒப்போ கே9எஸ் ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால் கண்டிப்பாக அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ஒப்போ நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதேபோல் இந்நிறுவனம் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக 5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துகிறது ஒப்போ நிறுவனம். அதேபோல் ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான்
கூறவேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K9s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X