புது கலர்., வேற லெவல் லுக்: ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது மாறுபாடு அக்டோபர் 20- விலை, அம்சங்கள்!

|

ஒப்போ கே9 ப்ரோ சாதனத்தின் நியூ நியான் சில்வர் வண்ண ஆப்ஷன் அக்டோபர் 20 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ கே 9 ப்ரோ விரைவில் புதிய நியான் சில்வர் வண்ண விருப்பத்தில் வரும் என நிறுவனம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்தமாதம் இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டது.

60 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு

60 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது அப்சிடியன் பிளாக் மற்றும் பனிப்பாறை ப்ளூ என்ற வண்ண விருப்பத்தில் வருகிறது. புதிய வண்ண விருப்பம் அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கும் என ஒப்போ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 60 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு, 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் அண்டர் ஸ்க்ரீன் கைரேகை சென்சார் வசதியுடன் வருகிறது.

புதிய வண்ண விருப்பம்

புதிய வண்ண விருப்பம்

ஒப்போ கே9 ப்ரோவின் புதிய வண்ண விருப்பத்தின் அறிவிப்பை வெய்போவில் வெளியிட்டது. புதிய வண்ண விருப்பம் நியான் சில்வர் என்று அழைக்கப்படும் எனவும் இது சென்சார்கள் சுற்றி பல வண்ண வளையங்களை கொண்ட பளபளப்பான கேமரா தொகுதியுடன் அலாய் அமைப்பை கொண்டிருக்கும். புதிய நியான் சில்வர் வண்ண விருப்பம் அக்டோபர் 20 அன்று தொடங்கப்படும் எனவும் புதிய வண்ண விருப்பத்தை தவிர அதே முந்தைய விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும் எனவும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.25,100 ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய சாதனம் வெளிவந்தது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி

மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

64எம்பி மெயின் கேமரா

64எம்பி மெயின் கேமரா

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தில் பல்வேறு பயன்முறை மோட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங்

4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங்

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே விரைவாக ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும். பின்பு கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ப்ளூடூத் V5.2, வைஃபை 802.11 ஏசி, 5 ஜி ஆதரவு, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியும் இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo K9 Pro Smartphones New Neon Colour Variant Going to Launch on October 20

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X