Home
Mobile

64எம்பி ரியர் கேமராவுடன் ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றம் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ கே9 ப்ரோ

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில்

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

64எம்பி மெயின் கேமரா

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தில் பல்வேறு கேமரா அம்சங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ கே9 ப்ரோ 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும்

இந்த ஒப்போ கே9 ப்ரோஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் சூப்பர் ஃபிளாஷ்

ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவு உள்ளது. எனவே விரைவாக ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும். பின்பு கைரேகை சென்சார் வசதி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ப்ளூடூத் V5.2, வைஃபை 802.11 ஏசி, 5 ஜி ஆதரவு, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

28ஜிபி மெமரி கொண்ட

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 2,199 (இந்திய மதிப்பில் ரூ.25,100)
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.30,800)
குறிப்பாக Obsidian Warrior,Neon Silver Sea மற்றும் Glacier Overture நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Oppo K9 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X