Home
Mobile

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சாதனம் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஸ்னாப்டிராகன் சிப்செட், 64எம்பி ரியர் கேமரா என அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9 5ஜி சாதனம். இப்போது ஒப்போ கே9 5ஜி சாதனத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

 1,080x2,400 பிக்சல் தீர்மானம்

1,080x2,400 பிக்சல் தீர்மானம்

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 768எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 768எஸ்ஒசி சிப்செட்

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 768எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 620 வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

28ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

ஒப்போ கே9 5ஜி சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி சென்சார்

64எம்பி பிரைமரி சென்சார்

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். இதுதவிர எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த புதிய ஸ்மார்ட்போன்.

 4300 எம்ஏஎச் பேட்டரி

4300 எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ கே9 5ஜி ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

தரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9 5ஜி சாதனம். பின்பு இந்த

5G SA / NSA, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5, GPS + GLONASS, USB Type-Cமற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ கே9 5ஜி சாதனம். பின்பு இந்த
சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.21,600-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo K9 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X