மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்: 6 ஜிபி ரேம் அம்சத்துடன் Oppo K7x அறிமுகம்!

|

ஒப்போ கே 7 எக்ஸ் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே இருக்கிறது. சீனாவில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் நாட்டின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.

ஒப்போ கே 7 எக்ஸ் ஸ்மார்ட்போன்

ஒப்போ கே 7 எக்ஸ் ஸ்மார்ட்போன்

ஒப்போவின் பிரபல ஸ்மார்ட்போன் தொடரான கே சீரிஸில் புதிய இடைநிலை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒப்போ கே7எக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாகும். ஒப்போ கே7 எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே இருக்கிறது.

ஒப்போ கே 7 எக்ஸ்: அம்சங்கள்

ஒப்போ கே 7 எக்ஸ்: அம்சங்கள்

ஒப்போ கே 7 எக்ஸ் ஆக்டோ கோர் மீடியாடெக் பரிமாண 720 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 5ஜி ஆதரவோடு வரும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு இருக்கிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கலர் ஓஎஸ்ஸில் இயங்குகிறது.

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

ஒப்போ கே 7 எக்ஸ்., 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. டிஸ்ப்ளே முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் செல்பி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு இருக்கிறது. ஒப்போ ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இனி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்: புதிய நடைமுறை இதுதான்!இனி வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்: புதிய நடைமுறை இதுதான்!

பின்புறத்தில் நான்கு கேமரா

பின்புறத்தில் நான்கு கேமரா

ஒப்போ கே 7 எக்ஸ் பின்புறத்தில் நான்கு கேமரா இருக்கிறது. இதில் செவ்வக வடிவத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது. 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை சென்சார் மற்றும் இரண்டு 2 எம்பி மேக்ரோ சென்சார்கள் உள்ளன.

ஒப்போ கே 7 எக்ஸ் விலை விவரங்கள்

ஒப்போ கே 7 எக்ஸ் விலை விவரங்கள்

ஒப்போ கே 7 எக்ஸ் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில் இது சீன சந்தையில் 1,399 யுவானாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.15,592 ஆகும். ஒப்போ கே 7 எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இந்தியாவில் இந்த சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

30W ஃபாஸ்ட் சார்ஜிங்

30W ஃபாஸ்ட் சார்ஜிங்

30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி யூனிட்டையும் இந்த சாதனம் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளுக்கு யூஎஸ்பி டைப்சி போர்ட் இருக்கிறது. ஒப்போ கே 7 எக்ஸ் ஸ்மார்ட்போன் ஒரே வேரிண்ட்டில் பிளாக் மிரர் மற்றும் ப்ளூ ஷேடோ என்ற வண்ண விருப்பங்களில் அறிமுகமாகியுள்ளது.

மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்

மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த சாதனத்தின் விலையில் அதிக மாறுபாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டால் நாட்டின் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo K7x Smartphone Launched With 6GB Ram, 48 Mp Rear Camera: Here the Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X