Home
Mobile

அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ கே15 (OPPO K15) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இந்த புதிய போன் டைமன்சிட்டி சிப்செட், ஐபி69 ரேட்டிங், 8000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஒப்போ போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ கே15 அம்சங்கள் (OPPO K15 Specifications): 6.59-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2760×1256 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஆக்டா-கோர் டைமன்சிட்டி 7360 சூப்பர் 4என்எம் (octa-Core Dimensity 7360 SUPER 4nm) சிப்செட் உடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே15 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ColorOS 16சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன. அதேபோல் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன.

ஒப்போ கே15 பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளன. அதுவும் இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் உள்ளது. இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ பதிவு செய்யும். எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.4, பெய்டோ (BeiDou), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது. மேலும் இந்த போனின் எடை 205 கிராம் ஆகும். ஸ்பீட் ஒயிட் மற்றும் கேல் கிரே (Gale Grey) நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ கே15 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 2299 yuan (இந்திய மதிப்பில் ரூ.32,790)-ஆக உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
OPPO K15 with 8000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X