OPPO ஒரே போடு.. OLED டிஸ்பிளே.. MD 9500s சிப்செட்.. AC ஃபேன்.. 50MP கேமரா.. புது OPPO போன்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்ற டர்போ சீரிஸ் மாடல்களில் அடுத்த ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு ரெடியாகிவிட்டது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் சிப்செட் கொண்ட மாடலாக இந்த புதிய டர்போ மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், ஓஎல்இடி டிஸ்பிளே, ஆக்டிவ் கூலிங் ஃபேன், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்கள் பட்டையை கிளப்புகிறது.
ஓப்போ நிறுவனத்தின் அடுத்த டர்போ மாடலாக ஓப்போ கே15 டர்போ ப்ரோ (OPPO K15 Turbo Pro) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனால், டிஸ்பிளே, கேமரா, சிப்செட் போன்ற பீச்சர்கள் வெளியாகி வருகின்றன. முன்னதாக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் கசிந்தது.

ஆனால், இப்போது மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் வர இருப்பதாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) ஆனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த சிப்செட் விவரங்கள் மட்டுமல்லாமல், கேமரா, டிஸ்பிளே மற்றும் கூலிங் சிஸ்டம் போன்ற விவரங்களையும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் பதிவிட்டுள்ளது. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ கே15 டர்போ ப்ரோ அம்சங்கள் (OPPO K15 Turbo Pro Specifications): 6.78 இன்ச் ஓஎல்இடி எல்டிபிஎஸ் (OLED LTPS) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 50 எம்பி மெயின் கேமரா வர இருக்கிறது. டர்போ சீரிஸ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும்படி இன்-பில்ட் ஆக்டிவ் கூலிங் ஃபேன் (In-built Active Cooling Fan) கிடைக்க இருக்கிறது.
ஆகவே, பேட்டரி கேபாசிட்டி அதிகமாக எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்கள் மட்டுமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் எக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்திய மார்கெட்டில் ஓப்போ கே13 டர்போ (OPPO K13 Turbo) மற்றும் ஓப்போ கே13 டர்போ ப்ரோ (OPPO K13 Turbo Pro) ஆகிய மாடல்கள் வெளியாகிவிட்டன. ஆகவே, இந்த ஓப்போ கே15 டர்போ மாடல்களையும் எதிர்பார்க்கலாம்.
ஓப்போ கே13 டர்போ ப்ரோ அம்சங்கள் (OPPO K13 Turbo Pro Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட்டை இந்த ஓப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஏஜிசி டிடி-ஸ்டார் டிபிளஸ் கிளாஸ் புரொடெக்சன் டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது.
6.8 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பவூக் ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த ஓப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.37,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, ஓப்போ கே15 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.40,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இது ஆரம்ப விலையாக இருக்கும். ரூ.50,000 பட்ஜெட்டில் டாப்-எண்ட் மாடல்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








