மிரண்டு போன மார்க்கெட்.. 8000mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. வருகிறது புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தற்போது ஒப்போ கே15 டர்போ (Oppo K15 Turbo Pro) எனும் ஸ்மார்ட்போன் உருவாக்கி வருகிறது. வரும் மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த ஒப்போ கே15 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ கே15 டர்போ அம்சங்கள் (Oppo K15 Turbo Pro Specifications): 6.59-இன்ச் டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒப்போ கே15 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் உடன் இந்த ஒப்போ கே15 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உடன் இந்த ஒப்போ கே15 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உடன் இந்த புதிய ஒப்போ வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதேபோல்IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இதில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ கே15 டர்போ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்ரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ கே15 டர்போ ஸ்மார்ட்போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்போ கே15 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.
அதேபோல் ஒப்போ நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








