Home
Mobile

OPPO-வின் கிங்.. K-சீரிஸின் கீழ் 2 புதிய போன்கள்.. பெர்ஃபார்மென்ஸ்-க்கு ஒரு குறையும் இருக்காது!

கடந்த ஜூலை மாதம் சீனாவிலும், அதன் பின்னர் இந்தியாவிலும் அறிமுகமான ஒப்போ கே13 டர்போ (Oppo K13 Turbo) மற்றும் ஒப்போ கே13 டர்போ ப்ரோ (Oppo K13 Turbo Pro) ஆகிய 2 கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்த 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ கே15 டர்போ சீரீஸில் (Oppo K15 Turbo Series) பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் வழியாக கிடைத்த தகவலின்படி இந்த சீரிஸின் கீழ் ஒப்போ கே15 டர்போ (Oppo K15 Turbo) மற்றும் ஒப்போ கே15 டர்போ ப்ரோ (Oppo K15 Turbo Pro) மாடல்கள் அறிமுகமாகும்.

OPPO-வின் கிங்.. K-சீரிஸின் கீழ் 2 புதிய போன்கள்!

ஒப்போ கே15 டர்போ, ஒப்போ கே15 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ஒப்போ தற்போது ஸ்னாப்டிராகன் 8-சீரிஸ் சிப்செட்களுடன் அதன் அடுத்த தலைமுறை கே-சீரிஸ் போன்களை சோதித்து வருகிறது.

முன்னதாக வெளியான ஒப்போ கே13 டர்போ மற்றும் ஒப்போ கே13 டர்போ ப்ரோ ஆகிய இரண்டும் ஒரே 6.8-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளன. ஆனால் ஒப்போ கே15 டர்போ மற்றும் ஒப்போ கே15 டர்போ ப்ரோ மாடல்களில் அப்படி இருக்காது. ஒப்போ கே15 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது சிறிய 6.59-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.

மறுபுறம் உள்ள ஒப்போ கே15 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான பெரிய 6.78-இன்ச் LTPS டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்பை கொண்டிருக்கலாம். இரண்டுமே பெரிய பேட்டரிகளை கொண்டிருக்கும். ஆனால் சரியான எம்ஏஎச் விவரங்கள் இல்லை. மீதமுள்ள அம்சங்கள் மற்றும் விலை குறித்து எந்த தகவலும் இல்லை.

ஒப்போவின் மினி ஸ்மார்ட்போன்: கே சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒருபக்கம் இருக்க, ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 15 சீரீஸையும் (OPPO Reno 15 Series) விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது இம்மாத இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், மேலும் சுவாரசியமாக இந்த சீரிஸின் கீழ் ஒப்போ ரெனோ 15 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸ் - ஜனவரி 2026 முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15 ஆனது 39,990 க்கும், ரெனோ 15 ப்ரோ மாடல் ரூ.49,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். மினி மாடலின் விலை இரண்டிற்கும் இடையே நிலைநிறுத்தப்படலாம்.

டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் மற்றும் 91மொபைல்ஸ் வழியாக கிடைத்த விவரங்களின்படி, ஒப்போ ரெனோ 15 மினி ஸ்மாட்போன் ஆனது 6.31 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இதே சீரிஸின் கீழ் உள்ள ரெனோ 15 மாடல் 6.59 இன்ச் டிஸ்பிளே உடனும், ரெனோ 15 ப்ரோ மாடல் 6.78 இன்ச் டிஸ்பிளே உடனும் அறிமுகம் செய்யப்படலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை ரெனோ 15 மினி மற்றும் ரெனோ 15 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே டைமன்சிட்டி 8450 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை ரெனோ 15 மினி மற்றும் ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் ரியர் கேமரா அமைப்பில் 200 மெகாபிக்சல் சாம்சங் எச்பி5 பிரைமரி கேமராவும், அல்ட்ரா-வைட் மற்றும் பெரிஸ்கோப் ஜூம் கேமராக்களுக்கான 50 மெகாபிக்சல் சென்சார்களும் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி குறித்த விவரங்கள் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K15 Turbo Pro Reportedly Testing With Snapdragon 8 Gen 5 What Else We Can Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X