வெச்சான் பாரு OPPO.. 7500mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மிட்-ரேஞ்ச் மாடலாக ஓப்போ கே15 ப்ரோ (OPPO K15 Pro) ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 7500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா மற்றும் 12 ஜிபி ரேம் கொடுத்து உள்ளது. இந்த ஓப்போ கே15 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஓப்போ கே15 ப்ரோ மற்றும் ஓப்போ கே15 ப்ரோ+ (OPPO K15 Pro+) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. ஸ்விப்ட் கூலிங் என்ஜின் கொண்ட மாடல்களாக இருக்கின்றன. இதில் ஓப்போ கே15 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்-ரேஞ்ச் பிரியர்களை தட்டித் தூக்கும்படி இருக்கிறது. முதலில் பீச்சர்களை பார்க்கலாம்.

ஓப்போ கே15 ப்ரோ அம்சங்கள் (OPPO K15 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 சூப்பர் 4என்எம் (Octa Core MediaTek Dimensity SUPER 8500 4nm) சிப்செட்டை இந்த ஓப்போ கே15 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆர்ம் மாலி ஜி720 எம்சி8 ஜிபியு (Arm Mail G720 MC8 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது. 6.59 (2760 x 1256 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த ஓப்போ கே15 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கிறது. 10எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. நைட் சீன்ஸ் (Night Scenes), மல்டி வியூ ரெக்கார்டிங் (Multi View Recording), டைம் லேப்ஸ் போட்டோகிராபி (Time Lapse Photography), ஏஐ ஐடி போட்டோஸ் (AI ID Photos) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த ஓப்போ கே15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 7500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.30 எம்எம் தடிமன் மற்றும் 202 கிராம் எடை கொடுத்துள்ளது. IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது. கோல்டன் லெஜண்ட் (Golden Legend), ரேடியண்ட் டஸ்ட் (Radiant Dust), ஓர்ஜின் கிரே (Origin Grey) மற்றும் சைபர் விங்க்ஸ் (Cyber Wings) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,344 ஆக இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.47,407ஆக இருக்கிறது. இந்த விலை சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டதாகும். இந்திய மார்கெட்டில் ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆகவே, இந்த ஓப்போ கே15 ப்ரோ மாடலை எதிர்பார்க்கலாம். குளோபல் வெளியீட்டுக்கு பிறகு தெரியவரும்.


Click it and Unblock the Notifications








