OPPO ஒரே போடு.. 8000mAh பேட்டரி.. 165Hz OLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. ஏப்.1 குறிச்சாச்சு.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்களான ஓப்போ கே15 ப்ரோ (OPPO K15 Pro) மற்றும் ஓப்போ கே15 ப்ரோபிளஸ் (OPPO K15 Pro+) ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்து, ஓப்போ பிரியர்களை மிரளவிட்டு உள்ளது.
சீன மார்கெட்டில் ஓப்போ கே13 டர்போ மற்றும் ஓப்போ கே14 டர்போ ப்ரோ மாடல்கள் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றன. இந்தியாவில் ஓப்போ கே14 சீரிஸ் மாடல்களும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியது. இப்போது, ஓப்போ கே15 ப்ரோ சீரிஸ் (OPPO K15 Pro Series) மாடல்கள் தயாராகிவிட்டன. வழக்கம்போல சீன மார்கெட்டில் முதலில் வெளியாக இருக்கின்றன.

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இதில் ஓப்போ கே15 ப்ரோ மற்றும் ஓப்போ கே15 ப்ரோபிளஸ் மாடல்கள் களமிறங்க இருக்கின்றன. கேமிங் மாடல்களாக இருப்பதால், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட்களை எதிர்பார்க்கலாம். ஆகவே, ஓப்போ கே15 ப்ரோபிளஸ் ஸ்மார்ட்போனின் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (MediaTek Dimensity 9500s) சிப்செட் வர உள்ளது.
ஓப்போ கே15 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெட் டைமன்சிட்டி (MediaTek Dimensity 8500) சிப்செட் கிடைக்க உள்ளது. சொல்லப்போனால், இந்த மாடல்களும் டர்போ பிராண்ட்டின் கீழ் வெளியாக இருந்தது. ஆனால், இதை ஓப்போ நிறுவனம் நிறுத்திவிட்டு, வழக்கம்போல ப்ரோ மற்றும் ப்ரோபிளஸ் மாடல்களாகவே வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓப்போ கே15 ப்ரோ அம்சங்கள் (OPPO K15 Pro Specifications): 1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 7500mAh பேட்டரி கொடுக்கப்பட உள்ளது. இந்த பேட்டரியுடன் 200 கிராம் எடை கொடுக்க உள்ளது. 8.3 எம்எம் தடிமன் உள்ளது. கூலிங் ஃபேன் கிடைக்குமா என்பது தெரியவரவில்லை.
ஓப்போ கே15 ப்ரோபிளஸ் அம்சங்கள் (OPPO K15 Pro+ Specifications): 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கும் 1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. 8000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே டீனா சர்டிபிகேஷன் வழியாக கசிந்துள்ளன. ஓப்போ நிறுவனமானது, வெளியீட்டு தேதியை மட்டுமே உறுதி செய்துள்ளது. மற்ற விவரங்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. இந்தியாவில் கடந்த மார்ச் 17ஆம் தேதி ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) வெளியாகியது.
7000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்தது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது. 6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இதிலும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் உள்ளது. 50 எம்பி மெயின் + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா உள்ளது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இந்தியாவில் ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் கிடைப்பதால், ஓப்போ கே15 5ஜி மாடலை எதிர்பார்க்கலாம். இருப்பினும், ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளியாகுமா என்பதை குளோபல் மார்கெட்டில் அந்த மாடல்கள் களமிறங்கும்போது தெரிந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








