Home
Mobile

Oppo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ கே15 (Oppo K15) ஸ்மார்ட்போனை விரைவில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இந்நிலையில் ஒப்போ கே15 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒப்போ கே15 அம்சங்கள் (Oppo K15 specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1256 x 2760 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Oppo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

Oppo களமிறக்கும் புதிய 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. எந்த மாடல்?

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos)போன்ற அம்சங்கள் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ கே15 ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: tenaa

Best Mobiles in India

English summary
Oppo K15 full specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X