Home
Mobile

ஜூலை 24-ல் களமிறங்கும் புது ஒப்போ 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் அடுத்து ஒப்போ கே15 (Oppo K15) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 24-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும். சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்த புதிய ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் உலக நாடுகளில் அறிமுகமாகும்.

அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் வெளியாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஒப்போ கே15 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜூலை 24-ல் களமிறங்கும் புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஒப்போ கே15 அம்சங்கள் (Oppo K15 Specifications): 6.59-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் இந்த ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒப்போ கே15 ஸ்மார்ட்போன். இதன் கேமரா பகுதியில் RGB ரிங் லைட்டும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளன. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் உள்ளது.

மீடியாடெக் டைமென்சிட்டி 7360 சூப்பர் சிப்செட் (MediaTek Dimensity 7360 Super chipset) உடன் இந்த ஒப்போ கே15 போன் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த போனில் 4,950mm² 'வேப்பர் சேம்பர்' (vapour chamber) கூலிங் டெக்னாலஜி ஆதரவு உள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஜூலை 24-ல் களமிறங்கும் புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த ஒப்போ கே15 போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்.

photo credits: opposhop, gsmarena

Best Mobiles in India

English summary
Oppo K15 China Launch Date Announced: check All details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X