Home
Mobile

ஓஹோ OPPO.. ஆல் இந்தியன்ஸ் அட்டென்சன்.. பக்காவான பட்ஜெட் விலையில் 2 புதிய 5G போன்கள்!

கடந்த 2025 ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ கே13 5ஜி (Oppo K13 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. அதை தொடர்ந்து அதே ஆண்டு ஜூன் மாதம் ஒப்போ கே13எக்ஸ் 5ஜி (Oppo K13x 5G) ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போது 2026 இல், ஒப்போ நிறுவனம் அதன் கே சீரிஸ் பிராண்டிங்கின் கீழ் 2 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஒப்போ கே15 சீரீஸ் (Oppo K15 Series) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சீரிஸின் கீழ் ஒப்போ கே15 (Oppo K15) மற்றும் ஒப்போ கே15எக்ஸ் (Oppo K15x) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓஹோ OPPO.. பக்காவான பட்ஜெட் விலையில் 2 புதிய 5G போன்கள்!

ஒப்போ கே15 சீரிஸின் வெளியீட்டு டீஸரை தவிர, இந்த சீரீஸ்க்கான பிரத்யேக மைக்ரோசைட்டையும் ஒப்போ உருவாக்கியுள்ளது. அதன் வழியாக ஒப்போ கே15 சீரிஸின் கீழ் டிசைன் மற்றும் விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியான டீஸரின் படி, புதிய ஒப்போ கே சீரீஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

டிசைனை பொறுத்தவரை, ஒப்போ கே15 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டு உள்ளது. டேப்லெட் வடிவ கேமரா மாட்யூலுக்குள், LED ஃபிளாஷுக்கு அடுத்ததாக சென்சார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமானது? ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும், அதே ரேம் கொண்ட 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும் அறிமுகமானது.

ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ)
- 120ஹெர்ட்ஸ் 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- அட்ரினோ A810 ஜிபியு உடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஆட்டோஃபோகஸ் கொண்ட 50 மெகாபிக்சல் OV50D40 சென்சார்
- 2 மெகாபிக்சல் OV02B1B இரண்டாம் நிலை கேமரா
- 16 மெகாபிக்சல் சோனி IMX480 செல்பீ கேமரா
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 80W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி

ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமானது? இந்தியாவில் ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,999 க்கும், 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கும் மற்றும் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 720 x 1604 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.67-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளே ஸ்பிளாஸ் டச் மற்றும் க்ளோவ் டச் தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரை LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்போனில் ஜெமினை, ஏஐ சம்மரி, ஏஐ ரெக்கார்டர் மற்றும் ஏஐ ஸ்டுடியோ உள்ளிட்ட பல்வேறு ஏஐ-தரவு அம்சங்களையும் சேர்த்துள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் எப் /2.0 அபெர்க்ஷர் உடனான 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை ஒப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W வயர்டு SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K15 5G Confirmed to Launching Soon in India what to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X