பிப்.10 க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. கலர்ஓஎஸ் 15.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட் விலையில் லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் மற்றும் அதிக பவர் கொண்ட மாடலாக ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) மாடல் வெளியாக இருக்கிறது. கலர்ஓஎஸ் 15 கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் லூமினஸ் ரென்டரிங் என்ஜின், டிரிட்டி என்ஜின், தெப்ட் புரொடெக்சன் கிடைக்கிறது. முக்கிய பீச்சர்கள் உறுதியாகிவிட்டன.
வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகவே, முக்கிய பீச்சர்கள் அதில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இப்போது, கலர்ஓஎஸ்15 (ColorOS 15) கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

ஆகவே, பவர் மட்டுமல்லாமல் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கப்போவது உறுதியாகி இருக்கிறது. இந்தியாவில் பட்ஜெட் விலையில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம். ஏனென்றால், முன்னதாக வெளியான ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G) மாடலின் ஆரம்ப விலை ரூ. 11,999ஆக மட்டுமே இருக்கிறது.
இந்த பட்ஜெட்டிலேயே 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்தது. இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6500mAh பேட்டரி வருகிறது. ஆகவே, எப்படி பார்த்தாலும், ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிலான விலைக்கே வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் முந்தைய வெர்ஷனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைத்தது.
ஆனால், இந்த ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது. மற்ற பீச்சர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்கள் ஏற்கனவே ஒரே மாதிரியாக இருப்பதை காட்டுகின்றன. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களை பார்க்கலாம்.
ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): கலர்ஓஎஸ் 15 கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி இருக்கிறது. ஆகவே, டிரினிட்டி என்ஜின் (Trinity Engine), லுமினஸ் ரென்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) மற்றும் தெப்ட் புரொடெக்சன் (Theft Protection) கிடைக்கிறது. 48 மாதங்களுக்கு ப்ளூயன்சி புரொடெக்சன் (Flueny Protection) கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode) கிடைக்கிறது. மேலும், ஏஐ ரீகம்போஸ் (AI Recompose), ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) மற்றும் டூயல் வியூ வீடியோ (Dual View Video) ஆகிய பீச்சர்களை கொடுத்துள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்துள்ளது.
30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பேக்கப் பெற்று கொள்ளலாம். 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்துள்ளது. பஞ்ச்-ஹோல் டிசைன் கிடைக்கிறது. ஐபி64 ரேட்டிங்கை இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ப்ரிசம் வயலெட் (Prism Violet) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய கலர்களில் இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








