OPPO-க்கு ஓ போடு.. ரூ.15000 பட்ஜெட்ல 5ஜி, 6500mAh பேட்டரி, IP64 உடன் புதிய போன் அறிமுகம்.. SALE பிப்.16 முதல்!
ஒப்போ (OPPO) நிறுவனம் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட் பிரிவின் கீழ் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது ஒப்போ கே14எக்ஸ் 5ஜி (Oppo K14x 5G) ஸ்மார்ட்போன் ஆகும். என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:
ஒப்போ கே14எக்ஸ் 5ஜி விலை விவரங்கள்: இந்தியாவில் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ கே14எக்ஸ் 5ஜி விற்பனை மற்றும் சலுகை விவரங்கள்: ஒப்போ நிறுவனம் SBI, HDFC வங்கி மற்றும் ICICI பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 வரை உடனடி வங்கி தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஒப்போவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் Flipkart மற்றும் Oppo ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும். இது ஐசி ப்ளூ மற்றும் பிரிசம் வயலட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
ஒப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள்: ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான கலர் ஓஎஸ் 15 கொண்டு இயங்கும் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் சிம் சப்போர்ட் உடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.75-இன்ச் எச்டி பிளஸ் (720x1570 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவுடன் வருகிறது
இதன் டிஸ்பிளே - 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட், 1125 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ், 16.7 மில்லியன் கலர்ஸ், 240Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட், 256 ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 83 சதவீதம் DCI-P3 கலர் கேமட் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேடிங்கையும் பெற்றுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ARM மாலி-G57 MC2 GPU உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் உடன் இயங்குகிறது. இது 6GB வரை LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்காக இது வைஃபை 5, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், BeiDou, GPS, GLONASS, கலிலியோ மற்றும் QZSS ஆகியவற்றையும் ஆதரிக்கிறது. கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டு உள்ளது
அதில் 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி ஷூட்டர் மற்றும் 2-மெகாபிக்சல் (f/2.4) மோனோக்ரோம் கேமரா ஆகியவைகள் உள்ளன. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் 5-மெகாபிக்சல் (f/2.2) முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. இதன் கேமரா செட்டப் 1080p/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. ஆன்போர்டு சென்சார்களின் பட்டியலில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஒரு அம்பியண்ட் லைட் சென்சார், ஒரு இ-காம்பஸ், ஒரு அக்ஸலரோமீட்டர் ஆகியவைகளை கொண்டுள்ளது
மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது. கடைசியாக ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் 166.6x78.5x8.6 மிமீ உள்ளது மற்றும் எடையில் சுமார் 212 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








