ஆர்டர் அள்ளுமே.. 50எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. ஆஃபரில் OPPO 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மறறும் 64ஜிபி மெமரி கொண்ட ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): ஓப்போ கே14எக்ஸ் 5ஜி போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1604 x 720 பிக்சல்கள், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் , 240Hz டச் சாம்பிளிங் ரேட், டிசிஐ பி3 கலர் காமட் , 56 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதுவும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர் ஓஎஸ் 16 (Color OS 16) மூலம் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 50 எம்பி பிரைமரி கேமரா +2 எம்பி மோனோகுரோம் கேமரா என்கிற டுயல் ரியல் கேமரா செட்டப் உடன் வெளிவந்துள்ளது ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant)உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 212 கிராம் ஆகும்.
ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 5ஜி என்ஏ / என்எஸ்ஏ (5G NA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ப்ரிசம் வயலெட் (Prism Violet) மற்றும் ஐசி ப்ளூ (Icy Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications