Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.15,249 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஓப்போ ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் பிரியர்களும் ஆர்டருக்கு மேல் ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலைக்கு ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஓப்போ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இதோ.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.15,999 விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.15,249 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. மாடல்?

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

மேலும், 1125 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் குளோவ் டச் (Glove Touch) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. கலர் ஓஎஸ் 16 (Color OS 16) கிடைக்கிறது. இதில் டிரினிட்டி என்ஜின் (Trinity Engine) மற்றும் லுமினஸ் ரென்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது.

எப்/1.8 அபெர்ஷருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், எப்/2.4 அபெர்சர் கொண்ட 2 எம்பி மோனோகுரோம் கேமராவுடன் டுயல் ரியல் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொடுத்துள்ளது. இந்த கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். எப்/2.2 அபெர்சருடன் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது. ஏஐ பீச்சர்களை பார்க்கையில், ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching), ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose) மற்றும் ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி போனில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வருகிறது.

மேலும், 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 8.61 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மேலும், 212 கிராம் எடை வருகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது.

ப்ரிசம் வயலெட் (Prism Violet) மற்றும் ஐசி ப்ளூ (Icy Blue) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 5ஜி என்ஏ / என்எஸ்ஏ (5G NA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) உள்ளது. இந்த விலைக்கு நல்ல பீச்சர்களையே பேக் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO K14x 5G With 6500mAh Battery Available At 20 Percent Discount in Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X