இறங்கி அடித்த OPPO.. பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மாடலான ஓப்போ கே4எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே, கேமரா மற்றும் ஓஎஸ் விவரங்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஓப்போ கோ14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ கே13எக்ஸ் 5ஜி (OPPO K13x 5G) பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, கூடுதல் பேட்டரி கேபாசிட்டியுடன் இந்த 6500mAh பேட்டரி கிடைக்க உள்ளது. வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆகவே, கேமரா, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட விவரங்கள் பிளிப்கார்ட் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன. ப்ளூ (Blue) மற்றும் வயலெட் (Violet) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. குளோபல் மார்கெட்டில் வெளியான ஓப்போ ஏ6டி 5ஜி (OPPO A6t 5G) மாடலை போலவே பீச்சர்கள், டிசைன் உள்ளது.
ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): 6500mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.
120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 48 மாதங்களுக்கான ப்ளூயன்சி புரொடெக்சனை கொடுத்துள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், 6.75 இன்ச் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கலாம்.
ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், ஓப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.11,999 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, எப்படி பார்த்தாலும் ரூ.15,000 பட்ஜெட்டில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி கிடைத்துவிடும். இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ள, முந்தைய மாடலை பார்க்க வேண்டும்.
ஓப்போ கே13எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K13x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை ஓப்போ கே13எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஎஸ் 15 (Color OS 15) கிடைத்துள்ளது. ஆகவே, ஓப்போ கே14எக்ஸ் 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கும்
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி50டி (OV50D) சென்சார் கிடைக்கிறது. இதே கேமரா சிஸ்டம் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனிலும் கிடைக்கலாம். சென்சாரில் மாற்றம் இருக்கலாம். கேலக்ஸிகோர் சென்சாருடன் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ கே13எக்ஸ் 5ஜி கொடுத்துள்ளது.
MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மற்றும் IP65 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதே டியூரபிலிட்டி மற்றும் ரெசிஸ்டன்ஸ் பீச்சர்கள் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனிலும் கட்டாயம் கிடைக்கும். அப்கிரேட் கூட செய்யப்படலாம். 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








