Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. டிஸ்கவுண்ட் ரேட்டில் 6500mAh பேட்டரி, 45W சார்ஜிங்.. 50MP கேமரா OPPO போன்!

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிக் பேக் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Bang Diwali Sale) ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமராவை கொடுத்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்கவுண்ட் விவரங்களை இதோ.

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக ரூ.17,499 விலைக்கு கிடைக்கிறது. தேர்ந்தடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கிறது. மேலும், 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. டிஸ்கவுண்ட் ரேட்டில் 6500mAh பேட்டரி!

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (1604 x 720 பிக்சல்கள்) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கின்றன. வெயிலிலும் தெளிவாக பார்க்க உதவும் அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) கிடைக்கிறது.

700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1125 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் ஆகியவை இந்த டிஸ்பிளேவில் இடம்பெற்றுள்ளன. குளோவ் டச் (Glove Touch) சப்போர்ட்டும் கிடைக்கிறது. கேமரா பிரிவை பொறுத்தவரை, 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் லென்ஸ் அடங்கிய டூயல் ரியர் கேமரா செட்டப் இதில் பேக் செய்யப்பட்டுள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் பர்ஃபாமென்ஸ் தருவதற்காக 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) பிராசஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் தேவைகளுக்கு ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (ARM Mali-G57 MC2 GPU) உள்ளது.

லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) சார்ந்த கலர் ஓஎஸ் 16 (Color OS 16) மூலம் இயங்குவதால், ஏஐ பீச்சர்கள் மற்றும் பர்ஃபாமென்ஸ் பூஸ்ட் பீச்சர்களை கஸ்டமர்கள் பெற முடியும். சார்ஜிங் மற்றும் பேட்டரியை கவனித்தால், 45W சூப்பர்வூக் (SUPERVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய மிகப்பெரிய 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய பேட்டரியால் 8.61 எம்எம் தடிமன் உள்ளது.

212 கிராம் எடையும் கொண்டுள்ளது. எனவே, ஸ்லிம்மான மற்றும் எடை குறைவான போன்களை விரும்புபவர்களுக்கு இது சற்றே கனமாக தோன்றலாம். புரொடெக்சனுக்காக பக்கவாட்டில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி போன் ஐஸி ப்ளூ (Icy Blue) மற்றும் ப்ரிசம் வயலெட் (Prism Violet) ஆகிய 2 கலர்களில் கிடைக்கிறது. மெமரி ஆப்ஷன்களை பொறுத்தவரை, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
OPPO K14x 5G With 4GB RAM Available At Discounted Price in Flipkart Big Bang Diwali Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X