Home
Mobile

பிளிப்கார்ட் சுதந்திர தின சேல்.. ஆஃபரில் 6500mAh பேட்டரி OPPO 5G போன்.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களுடன் வெளியான ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,375 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.16,624 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

பிளிப்கார்ட் சுதந்திர தின சேல்.. ஆஃபரில் 6500mAh பேட்டரி OPPO 5G போன்!

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கொடுத்து, பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாடலாக இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கலர் ஓஎஸ் 16 (Color OS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, லேட்டஸ்ட் ஏஐ பீச்சர்கள் மற்றும் மல்டி மீடியா பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி1 ஜிபியு (ARM Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) சப்போர்ட் கொண்ட 6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது.

குளோவ் டச் (Glove Touch) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1125 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், 6500mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.61 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. அதேபோல 212 கிராம் எடை வருகிறது. ஆகவே, காம்பாக்ட் டிசைன் மற்றும் லைட் வெயிட் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்காது.

1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கொண்ட டூயர் ரியர் கேமரா செட்டப்பை இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.

IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது. ஐஸி ப்ளூ (Icy Blue) மற்றும் ப்ரிசம் வயலெட் (Prism Violet) கலர்களில் இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட மாடல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
OPPO K14x 5G With 4GB RAM Available At 10 Percent Discount on Flipkart Freedom Sale 2026 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X