மிரள விட்ட OPPO.. ரூ.12,249 க்கு 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் நம்ப முடியாத விலைக்கு 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட புதிய ஸ்டோரேஜ் வெர்ஷனை ஓப்போ நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போனின் பேசிக் வெர்ஷனாக இது இருக்கிறது.
ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் ஏற்கனவே மார்கெட்டில் வெளியாகிவிட்டது. பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ ஸ்டோரில் விற்பனைக்கும் கிடைக்கின்றன. இப்போது, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட புதிய பேசிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வேரியண்ட்டின் விற்பனை தள்ளுபடி போக பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கிவிட்டது. ஆகவே, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.750 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.12,249 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. மேலும், 3 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.
ஐஸி ப்ளூ (Icy Blue) மற்றும் ப்ரிசம் வயலெட் (Prism Violet) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், முன்னதாக வெளியான 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. இந்த மாடல்களும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. பீச்சர்களில் எந்த மாற்றமும் கிடையாது.
ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. 1125 நிட்ஸ் எச்பிஎம் மோடில் கிடைக்கிறது.
இதுபோக டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டியை வழங்கி உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. கலர் ஓஎஸ் 16 (Color OS 16) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி1 ஜிபியு (ARM Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) மற்றும் குளோவ் டச் (GloveTouch) சப்போர்ட் டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமராவை இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.
இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இது ஸ்லிம் மாடல் கிடையாது. 8.61 எம்எம் தடிமன் உள்ளது. மேலும், 212 கிராம் எடை கொண்டுள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) உள்ளது.


Click it and Unblock the Notifications








