Home
Mobile

OPPO சேல் பிச்சிக்குது.. ரூ.12,969 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் 6500mAh பேட்டரி, 45W சூப்பர்வூக் சார்ஜிங், 50 எம்பி கேமரா மற்றும் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், குளோவ் டச் சப்போர்ட் கொடுத்துள்ளது. இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக ஆர்டர் செய்தால் ரூ.1,530 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,969 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதேபோல தள்ளுபடியில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.

OPPO சேல் பிச்சிக்குது.. ரூ.12,969 பட்ஜெட்ல 6500mAh பேட்டரி!

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர் ஓஎஸ் 16 (Color OS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.

6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் கொடுத்துள்ளது. 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.

700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1125 நிட்ஸ் எச்பிஎம் சப்போர்ட் கிடைக்கிறது. அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) சப்போர்ட் கொடுத்துள்ளது. மேலும், குளோவ் டச் (GloveTouch) கொடுக்கப்பட்டு உள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் (AI Portrait Retouching), ஏஐ பர்பெக்ட் ஷாட் (AI Perfect Shot) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் டிரினிட்டி என்ஜின் (Trinity Engine) உள்ளது. லுமினஸ் ரென்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) கிடைக்கிறது. 50 எம்பி வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மோனோகுரோம் கேமரா கொண்ட டுயல் ரியல் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. பெரிய 6500mAh பேட்டரி கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 8.61 எம்எம் தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொடுத்துள்ளது.

5ஜி என்ஏ / என்எஸ்ஏ (5G NA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. மேலும், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் கிடைக்கிறது. ப்ரிசம் வயலெட் (Prism Violet) மற்றும் ஐசி ப்ளூ (Icy Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K14x 5G With 4GB RAM 50MP Camera Available Under Rs 15000 in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X