டிமாண்ட்.. செம்ம டிமாண்ட்.. ரூ.1,500 ஆஃபரில் 6500mAh பேட்டரியுடன் OPPO 5G போன்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சாசா லேலே விற்பனை (Sasa Lele Sale) தொடங்க இருக்கிறது. இந்த விற்பனைக்கு முன்னதாக நடக்கும் எர்லி பேர்ட் டீலில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போனுக்கு பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. மலிவான விலைக்கு வாங்கலாம். எர்லி பேர்ட் டீல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 6 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,499 விலையில் வாங்கி கொள்ளலாம்.

மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 5 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.18,999 விலைக்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.1,500 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதைவிட மலிவான விலைக்கு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.
இந்த மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.14,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஐஸி ப்ளூ (Icy Blue) மற்றும் ப்ரிசம் வயலெட் (Prism Violet) கலர்களில் இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
ஓப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Specifications): ஆர்ம் மாலி ஜி57 எம்சி1 ஜிபியு (ARM Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட்டை கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது.
1604 x 720 பிக்சல்களுடன் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1125 நிட்ஸ் எச்பிஎம் மோட் வருகிறது.
கூடுதலாக டிசிஐ பி3 கலர் காமட் கொண்ட டிஸ்பிளேவாகவும் இது இருக்கிறது. குளோவ் டச் (GloveTouch) சப்போர்ட் கொண்டுள்ளது. அவுட்டோரில் பக்கா அவுட்புட் கொடுக்கும்படி அவுட்டோர் மோட் 2.0 (Outdoor Mode 2.0) வருகிறது. IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
8.61 எம்எம் தடிமனுடன் 6500mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பெரிய பேட்டரிக்கு 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மொத்தமாக 212 கிராம் எடையில் வருகிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 2 எம்பி மோனோகுரோம் கேமரா சப்போர்ட் உள்ளது.
முன்பக்கத்தில் 5 எம்பி கேமராவை இந்த இந்த ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802.11 ஏசி மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டியை கொடுக்கிறது. ஜிபிஎஸ், டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications