Home
Mobile

இதுதான் புதிய OPPO 5ஜி போன்.. கம்மி பட்ஜெட்.. 50எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒப்போ (OPPO) நிறுவனம் இந்தியாவில் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போனை வரும் பிப்ரவரி 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன.

டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இதுதான் புதிய OPPO 5ஜி போன்.. கம்மி பட்ஜெட்.. எந்த மாடல்?

ஒப்போ கே14எக்ஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14x 5G Full Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 11250 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300(MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதி உள்ளதாகக் கூறப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இதுதான் புதிய OPPO 5ஜி போன்.. கம்மி பட்ஜெட்.. எந்த மாடல்?

6500mAh பேட்டரி உடன் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K14x 5G design revealed: check all detail here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X