முரட்டு பீஸ் ரெடி.. 8000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. புது OPPO கே14 டர்போ சீரீஸ்!
ஓப்போ நிறுவனத்தின் அடுத்த டர்போ மாடல்களாக ஓப்போ கே14 டர்போ சீரிஸ் (OPPO K14 Turbo Series) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் பீச்சர்கள் மற்றும் வெளியீடு குறித்த விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. கூலிங் ஃபேன் கிடைக்க இருக்கிறது. ஓப்போ கே14 டர்போ சீரிஸ் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆக்டிவ் கூலிங் ஃபேன் கொண்ட மாடல்களாக ஓப்போ கே13 டர்போ (OPPO K13 Turbo) மற்றும் ஓப்போ கே13 டர்போ ப்ரோ (OPPO K13 Turbo Pro) மாடல்கள் கடந்த ஜூலை மாதம் சீனாவில் வெளியாகின. 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற பீச்சர்கள் கிடைத்ததால் விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றது.

ஆகவே, ஓப்போ கே14 டர்போ சீரிஸ் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்கூட்டியே வெளியாக இருப்பது, டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக தெரியவந்துள்ளது. வெளியீட்டு மாதம் மற்றும் முக்கிய பீச்சர்கள் ஆகியவை டிஜிட்டல் சாட் ஸ்டேஷனில் கசிந்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதமே இந்த சீரிஸ் வெளியாக உள்ளது.
ஓப்போ கே14 டர்போ சீரிஸ் அம்சங்கள் (OPPO K14 Turbo Series Specifications): 6.59 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, ஓப்போ கே14 டர்போ மாடலில் வருகிறது. 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, ஓப்போ கே14 டர்போ ப்ரோ மாடலில் கிடைக்க உள்ளது. இந்த மாடல்களிலும் ஆக்டிவ் கூலிங் ஃபேன் கிடைக்க உள்ளது. டைமன்சிட்டி 9500 சிப்செட் கிடைக்க உள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க உள்ளது. ஒயிட் (White), கிரே (Gray), பிங்க் (Pink) மற்றும் போர்ஜ்டு கார்பன் (Forged Carbon) கலர்களில் கிடைக்க இருக்கிறது. 201 கிராம் எடை வருகிறது. 8000mAh பேட்டரி கொண்ட மாடல்களாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா (OIS) மற்றும் ஃபுல் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வர இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. சீன மார்கெட்டில் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு பிறகு ஓரிரு மாதங்களில் இந்தியா மற்றும் குளோபல் மார்கெட்டில் வெளியாகும். ஏனென்றால், ஓப்போ கே13 டர்போ சீரிஸ் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வெளியாகியது.
அதாவது, சீனாவில் ஓப்போ கே14 டர்போ சீரிஸ் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வெளியாகியது. அதன்படி மே மாதத்தில் இந்தியாவில் ஓப்போ கே14 டர்போ சீரிஸ் மாடல்களை எதிர்பார்க்கலாம். இந்தியாவில் ஓப்போ கே13 டர்போ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999 ஆக இருக்கிறது.
ஓப்போ கே13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999 ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.30,000 பட்ஜெட்டில் கே14 டர்போ மாடலை எதிர்பார்க்கலாம். கே14 டர்போ ப்ரோ மாடலை ரூ.40,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இந்திய மார்கெட்டிலும் வெளியாக இருப்பதால், ஓப்போ பிரியர்களிடையே இப்போதே எதிர்பார்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








