Home
Mobile

களைகட்டும் OPPO K-சீரீஸ்.. பேக்-டூ-பேக் அறிமுகம்.. பிப்.10 இல் 1 போன்.. உடனே மேலும் 2 புது போன்கள்!

ஒப்போ (OPPO) நிறுவனம் பேக் டூ பேக் அறிமுகங்களை அறிவித்துள்ளது. ஒப்போ நிறுவனம் அதன் புதிய ஒப்போ கே14எக்ஸ் (Oppo K14x) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று அறிவித்த வேகத்தில்.. ஒப்போவின் டர்போ சீரிஸின் கீழ் மேலும் 2 புதிய மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

அது ஒப்போ கே14 டர்போ சீரீஸ் (Oppo K14 Turbo Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதன் கீழ் ஒப்போ கே14 டர்போ (Oppo K14 Turbo) மற்றும் ஒப்போ கே14 டர்போ ப்ரோ (Oppo K14 Turbo Pro) ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேக்-டூ-பேக் அறிமுகம்.. பிப்.10 இல் 1 போன்.. உடனே மேலும் 2!

இந்த ஸ்மார்ட்போன்களின் மாடல் பெயர்கள் குறிப்பிடுவது போலவே - இவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ கே13 டர்போ (Oppo K13 Turbo) மற்றும் ஒப்போ கே13 டர்போ ப்ரோ (Oppo K13 Turbo Pro) ஆகிய மாடல்களின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும்.

ஒப்போ கே14 டர்போ சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள தகவல்களின்படி, ஒப்போவின் 2 கே14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் விரைவில் சீனாவில் அறிமுகமாகும். ஒப்போ நிறுவனம் இன்னும் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அது வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன அறிமுகத்தை தொடர்ந்து இந்திய அறிமுகமும் நடக்கும்.

ஒப்போ கே14 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? மேற்குறிப்பிட்ட லீக்கர் வெளியிட்டுள்ள விவரங்களின் படி, ஒப்போ கே14 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மறுகையில் உள்ள ப்ரோ மாடலில்சற்றே பெரிய 6.78-இன்ச் டிஸ்பிளேவை பேக் செய்யலாம்

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கேமிங் மற்றும் பிற ரிசோர்ஸ்-இன்டென்சிவ் டாஸ்க்களின் போது வெப்பநிலையை பராமரிக்க ஆக்டிவ் கூலிங் ஃபேன்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, ஒப்போ கே14 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் 3என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி9500 சிப்செட்களால் இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஒப்போ நிறுவனம் அதன் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவின் கீழ் ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி (Oppo A6i Plus 5G) மற்றும் ஒப்போ ஏ6வி 5ஜி (Oppo A6v 5G) என்கிற 2 மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி மற்றும் ஒப்போ ஏ6வி 5ஜி முக்கிய அம்சங்கள்: இந்த இரண்டு 5 போன்களுமே டூயல் சிம் கார்டு ஆதரவுடன் வருகிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 6.75-இன்ச் HD+ (720 x 1570 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேக்களை கொண்டு உள்ளன.

இதன் டிஸ்பிளேக்கள் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி , 1125 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 100 சதவீதம் sRGB, 16.7 மில்லியன் கலர்களுக்கான ஆதரவு மற்றும் 240Hz வரைடச் சாம்ப்ளிங் ரேட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ள.

மேலும் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே MediaTek Dimensity 6300 சிப்செட்டால் இயக்கப்படுகின்றன. இந்த சிப்செட் 2 செயல்திறன் கோர்கள் மற்றும் ஆறு செயல்திறன் கோர்களை கொண்டுள்ளது, இது 2.4GHz பீக் கிளாக்டு ஸ்பீடை வழங்குகிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளன. அதில் 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமராக்கள் மற்றும் 2-மெகாபிக்சல் (f/2.4) மோனோக்ரோம் கேமராக்கள் உள்ளன.

முக்கிய வேறுபாடாக ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 8-மெகாபிக்சல் (f/2.0) செல்பீ கேமரா உள்ளது. மறுகையில் உள்ள ஒப்போ ஏ6வி 5ஜி ஸ்மார்ட்போனில் 5-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா உள்ளது. இரண்டு போன்களுமே 1080p/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறனை கொண்டுள்ளன.

இன்னொரு முக்கிய வேறுபாடு பேட்டரியில் உள்ளது. ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஒப்போ ஏ6வி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மாட்போன்களும் 45W SuperVOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன.

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்களுடன் வருகின்றன. அளவீடுகளில் ஒப்போ ஏ6ஐ பிளஸ் 5ஜி மற்றும் ஒப்போ ஏ6வி 5ஜி ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டுமே 166.6x78.51x8.61மிமீ பரிமாணங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஏ6ஐ 5ஜி மாடல் சுமார் 216 கிராம் எடையுள்ளதாக உள்ளது. ஏ6வி 5ஜி மாடல் மாடல் சற்று இலகுவானதாக உள்ளது, இது சுமார் 212 கிராம் எடையை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo K14 Turbo Series Launch Timeline Tipped After Oppo K14x Feb 10 India Launch Date Reveal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X