OPPO ஒரே போடு.. 8000mAh பேட்டரிக்கு ரூ.5,000-க்கு எகிறிய விலை.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே..எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் 8000mAh பேட்டரி மாடலான ஓப்போ கே12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.5,000 வரையில் எகிறி இருக்கிறது. இப்படி உயர்த்தப்பட்ட விலைக்கு ஏற்ற பீச்சர்களுடன் இந்த ஓப்போ கே12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறதா என்பதை பார்க்கலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஓப்போ கே12 பிளஸ் 5ஜி வெளியாகபோது, 6 + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும் இருந்தது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,999 ஆக இருந்தது.

ஆனால், இப்போது 6 + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,999ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.40,999ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.5,000 வரையில் விலை உயர்ந்துள்ளது.
இருப்பினும், பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் கிரெடிட் கார்டு மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. இந்த விலையில் மட்டுமே மாற்றங்கள் இருக்கின்றன. பீச்சர்கள் வழக்கம்போல இருக்கின்றன. விலை ஏறினாலும் வாங்குவதற்கு அப்படி என்னென்ன பீச்சர்கள் இதில் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
ஓப்போ கே14 பிளஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14 Plus 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Max 4nm) சிப்செட்டுடன் இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16.5 (ColorOS 16.5) கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கலர்ஓஎஸ் வெர்ஷனில் ஒபிளஸ் கனெக்ட் (O+ Connect), ஏஐலிங்க் பூஸ்ட் 4.0 (AI LinkBoost 4.0) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஸ்மார்ட்சென்ஸ் எஸ்சி532எச்எஸ் (Smartsense SC532HS) சென்சார் உள்ளது.
மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி ரொடுக்கப்பட்டு இருக்கிறது. டெப்த் கேமராவுக்கு கேலக்ஸிகோர் ஜிசி02எம்1பி (GC02M1B) சென்சார் கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி கொடுக்கிறது.
45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications
