செப்.29-க்கு அப்புறம் இதுதான்.. 8000mAh பேட்டரி.. OIS கேமரா.. 16GB ரேம்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட் விலையில் மாடல்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களை ஒட்டுமொத்தமாக தட்டித்தூக்கும்படி ஓப்போ கே14 பிளஸ் 5ஜி (OPPO K14 Plus 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. சிப்செட், கேமரா, பேட்டரி, டிஸ்பிளே உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற செப்டம்பர் 29ஆம் தேதியன்று இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனால், ஓப்போ மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் டிசைன் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட முழு பீச்சர்களும் உறுதியாகிவிட்டன. இதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ கே14 பிளஸ் 5ஜி அம்சங்கள் (OPPO K14 Plus 5G Specifications): 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 450 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொண்டுள்ளது. IP69K ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Dust & Dust Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 85 டிகிரி செல்சியஸ் ஹாட் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஹை-பிரசர் வாட்டர் ஜெட்ஸ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. டேமேஜ் ப்ரூப் கொண்ட 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைக்கிறது.
இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) மற்றும் அல்ட்ரா வால்யூம் மோட் (Ultra Volume Mode) கிடைக்கிறது. 300 சதவீதம் வரையில் அல்ட்ரா வால்யூம் கிடைக்கும். சோனி ஐஎம்எக்ஸ்480 (SONY IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 4K அல்ட்ரா கிளியர் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), ஏஐ ரீகம்போஸ் (AI Recompose), ஏஐ எரைசர் (AI Eraser) உள்ளிட்ட ஏஐ பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டில் கிடைக்க இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7360 மேக்ஸ் சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சூப்பர்கூல் விசி சிஸ்டம் கிடைக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.
ஒயிட் மற்றும் ஆரஞ்ச் கலர்களில் கிடைக்க இருக்கிறது. செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகி, அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஓப்போ கே14 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பட்ஜெட் விவரங்கள் உறுதியாகவில்லை. இருப்பினும், ரூ.40,000 பட்ஜெட்டுக்கு மேல் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
